தமிழ் மென்பொருள் உருவாக்கம் திண்டுக்கல் நிபுணருக்கு முதல்வர் விருது!

தமிழ் மென்பொருள் உருவாக்கம் திண்டுக்கல் நிபுணருக்கு முதல்வர் விருது!

தமிழ் மென்பொருள் உருவாக்கம் திண்டுக்கல் நிபுணருக்கு முதல்வர் விருது!

தமிழ் வளர்ச்சித் துறையின் 2017 ம்ஆண்டுக்கான தமிழ் புத்தாண்டு விருது பெறும் தமிழறிர்ஞர்கள், தமிழ் அமைப்புகள், மென்பொருள் நிறுவன பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

இதில் முதல்வர் கணினி தமிழ் விருது திண்டுக்கல்லை சேர்ந்த ‘அல்டி சாப்ட் சொல்யூஷன்’ நிறுவன நிர்வாக இயக்குனர் ஆர்.துரைப் பாண்டிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் tamilpulavar.org என்ற இணையதளத்தை 2016 அக்., 22 ல் உருவாக்கினார். இதில் 9 லட்சம் தமிழ் – ஆங்கிலம், ஆங்கிலம்- தமிழ்ச் சொற்கள் உள்ளன.இன்றைய தமிழ் அகராதியில் சந்த சொல், எதுகை, மோனை, வினைச் சொல், அசை பிரித்து அளவிடுதல், மாத்திரைகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. மேலும் 4 லட்சம் டெக்னிக்கல் சொற்களுக்கும் தமிழ் பொருள் விளக்கப்பட்டுள்ளது. 6 லட்சம் பழமொழிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆர்.துரைப்பாண்டி கூறியதாவது: எம்.ஏ., பொருளியல் படித்தேன். 1999ல் ‘தமிழ் அருவி’ என்ற மென்பொருள் உருவாக்கினேன். 2016ல் உருவாக்கப்பட்ட tamilpulavar.org என்ற இணையதளம் மூலம் பல நுால்களில் இருந்து தொகுந்து தமிழ்ச் சொற்களை புகுத்தியுள்ளேன். இதற்கு விருது கிடைத்துள்ளது. இதே போல இசைப்புலவர் என்ற இணையதளத்தையும் உருவாக்கியுள்ளேன்.

இதில் தமிழ் இசை 500 தொகுப்புகளும், இசை ஆராய்ச்சி கட்டுரைக்களம் 1,500ம் புகுத்தியுள்ளேன்.இது விரைவில் வெளியாக உள்ளது, என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: