“தமிழ் மொழி இனிமையான மொழி!” – ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம்!

``தமிழ் மொழி இனிமையான மொழி!” - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம்!

“தமிழ் மொழி இனிமையான மொழி!” – ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம்!

தமிழ் மொழி இனிமையான மொழி என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழகத்தில் மாவட்டம்தோறும் ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். அதன்படி விழுப்புரம் மாவட்டத்துக்கு வருகை தந்த அவர், ஆரோவில்லில் இருக்கும் ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி சர்வம் மற்றும் சிறுவர் பயிற்சி மையத்தைப் பார்வையிட்டார். அங்கு கிராமப்புற மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் கணினிப் பயிற்சி, ஆங்கிலம் பேசுவதற்கான பயிற்சி, கைவினை மற்றும் தற்காப்புப் பயிற்சி உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டு மாணவர்களையும், பயிற்றுநர்களையும் பாராட்டினார். அதைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை அவர் கண்டுகளித்தார்.

அதன்பின் தமிழில் வணக்கம் கூறி தனது உரையைத் தொடங்கிய அவர், “புதுச்சேரியை ஒட்டியுள்ள பூத்துறை கிராமத்தில் இயங்கிவரும் `சர்வம்’ அமைப்பு கிராமப்புற மாணவர்கள் மற்றும் பெண்களின் முன்னேற்றத்துக்குப் பாடுபட்டு வருவது பாராட்டத்தக்கது. தொடக்கத்தில் இரண்டு கிராமங்களுக்குச் சேவை ஆற்றிய இந்த அமைப்பு தற்போது 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குச் சேவையாற்றுவது மிகவும் பாராட்டத்தக்கது. தமிழ் மொழி இனிமையான மொழி. தமிழ் மொழியை நான் விரும்புகிறேன்” என்று பேசினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: