”தமிழர்கள் இணைந்தால் எந்த நாட்டிலும் ஆட்சியைக் கைப்பற்றலாம்” – கயானா பிரதமர்!

”தமிழர்கள் இணைந்தால் எந்த நாட்டிலும் ஆட்சியைக் கைப்பற்றலாம்” - கயானா பிரதமர்!

”தமிழர்கள் இணைந்தால் எந்த நாட்டிலும் ஆட்சியைக் கைப்பற்றலாம்” – கயானா பிரதமர்!

”தமிழர்கள் இணைந்து செயல்பட்டால், எந்த நாட்டிலும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றலாம்” என்று கயானா நாட்டின் தமிழ்ப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

உலகத் தமிழர் பொருளாதார நிறுவனம் மற்றும் சென்னை வளர்ச்சிக் கழகம் சார்பில் 5-வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு புதுச்சேரியை அடுத்த தமிழகப் பகுதியில் இன்று தொடங்கியது. வரும் 14-ம் தேதி வரை நடக்கும் இந்த மாநாட்டை திறந்துவைத்துப் பேசிய கயானா நாட்டு பிரதமர் மோசஸ் வீராசாமி, “வெறும் 4 சதவிகித தமிழர்கள் மட்டுமே எங்கள் கயானா நாட்டில் வசிக்கின்றனர். ஆங்கிலேய காலனி ஆதிக்க காலத்தில், தென் இந்தியாவிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்கள் அவர்கள். சிறுபான்மையினராக வாழ்ந்துவரும் தமிழர்களில் இருந்து ஒருவர் அங்கு பிரதமராக வருவது இதுவே முதல் முறை. சிறுபான்மையினராக வாழும் தமிழர்களும், ஆப்பிரிக்க இனத்தவர்களும் இணைந்து, 6 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியிருக்கிறோம்.

சிறுபான்மையினர்கள் இணைந்து செயல்பட்டால் வெற்றிபெற முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் இது. உலக அளவில் வசிக்கும் தமிழர்கள் இதேபோல இணைந்து செயல்பட்டால், எளிதில் முன்னேற முடியும். உலகில் எந்த நாட்டில் வாழும் தமிழர்களாக இருந்தாலும் அவர்கள் இணைந்து செயல்பட்டால் அங்கு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும். கயானா நாட்டில் இயற்கை எரிவாயு வளம் அதிகமாக உள்ளது. ஆனால், அதில் எங்களுக்கு போதிய அனுபவம் இல்லை. எனவே, வெளிநாட்டு முதலீட்டாளர்களை அந்தத் துறையில் முதலீடு செய்வதற்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். அதேபோல, சுரங்கத் தொழிலிலும் கயானா நாட்டில் முதலீடு செய்யலாம்” என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: