இலங்கைக்கு ஒரு லட்சம் தமிழ் நூல்கள் வழங்க இருப்பதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தகவல்!

இலங்கைக்கு ஒரு லட்சம் தமிழ் நூல்கள் வழங்க இருப்பதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தகவல்!

இலங்கைக்கு ஒரு லட்சம் தமிழ் நூல்கள் வழங்க இருப்பதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தகவல்!

இலங்கைக்கு ஒரு லட்சம் தமிழ் நூல்கள் வழங்க இருப்பதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஓரிரு நாட்களில் மலேசிய தமிழாசிரியர்கள் தமிழகம் வர உள்ளனர். மலேசியா வாழ் தமிழர்கள் பயன்பெறும் வகையில் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.

முதல்வரின் ஒப்புதலுடன், தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு ஒரு லட்சம் தமிழ் நூல்களை வழங்க உள்ளோம். இதற்காக, இலங்கை கல்வி அமைச்சர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்து ஆலோசனை நடத்திச் சென்றார்.

பெண்களுக்காக ஏராளமான திட்டங்களை வகுத்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தினார். ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு தாலிக்கு 4 கிராம் தங்கம் என்பதை 8 கிராமாக உயர்த்தி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தினார். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதில் தமிழகம் முன்னோடியாகத் திகழ்கிறது. இதற்கு உதாரணமாக, சென்னை அண்ணா நகர், கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையங்கள் சிறந்த காவல் நிலையங்களாக மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டு, பாராட்டு பெற்றுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>