தமிழ்நாட்டுக்கு 50 வயது! – பொன்விழா கொண்டாடப்போவதாக முதல்வர் அறிவிப்பு!

தமிழ்நாட்டுக்கு 50 வயது! - பொன்விழா கொண்டாடப்போவதாக முதல்வர் அறிவிப்பு!

தமிழ்நாட்டுக்கு 50 வயது! – பொன்விழா கொண்டாடப்போவதாக முதல்வர் அறிவிப்பு!

சென்னை மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாள் இன்று (ஜனவரி 14). தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. மெட்ராஸ் மாகாணத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என, பல மொழிகள் பேசுபவர்களும் இருநதனர். பின்னர், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. மெட்ராஸ் மாகாணத்தில் தமிழ் பேசுவோர்தான் அதிகமிருந்தார்கள். மெட்ராஸ் ஸ்டேட் என்று அழைக்கப்பட்ட தமிழகத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தி விருதுநகரைச் சேர்ந்த காந்தியவாதி தியாகி கண்டன் சங்கரலிங்கனார் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தார்.

இந்நிலையில், தமிழகத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டதை நினைவுகூரும் வகையில், ஜனவரி 14-ம் தேதி பொன்விழா கொண்டாட இருப்பதாகச் சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

தமிழ்நாடு, முன்பு சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்டு வந்தது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர், தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அண்ணா ஆட்சிக் காலத்தில் 1969-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி தமிழ்நாடு என அதிகாரபூர்வமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. வரும் ஜனவரி 14-ம் தேதியோடு பெயர் மாற்றம் நிகழ்ந்து 50 ஆண்டுகள் ஆகின்றன.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110-ம் விதியின் கீழ் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடும்போது, “தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் இணைந்து சென்னை மாகாணம் என்று வழங்கப்பட்டு வந்த நிலையில், அதை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென்று 1956-ம் ஆண்டு ஜூலை மாதம் தியாகி சங்கரலிங்கனார் கோரிக்கை வைத்தார். அப்போது காங்கிரஸ் ஆளுங்கட்சியாக இருந்தது.

அண்ணா தலைமையிலான அரசு அமைந்தபின், சென்னை மாகாணத்துக்குத் `தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம் செய்ய சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 1969-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி சென்னை மாகாணம் தமிழ்நாடு எனப் பெயர் மாறியது.

வரலாற்று சிறப்புமிக்க நம் மாநிலம் தமிழ்நாடு என்ற பெயரோடு 50-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு அதை ‘தமிழ்நாடு பொன்விழா’ ஆண்டாக கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது” என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: