“உயர்கல்வியில் சீனாவை விட தமிழகம் முன்னணியில் உள்ளது” – தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!

“உயர்கல்வியில் சீனாவை விட தமிழகம் முன்னணியில் உள்ளது” – தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!

உயர்கல்வி பெறுபவர்கள் எண்ணிக்கையில் சீனாவை விட தமிழகம் முன்னணியில் உள்ளது என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்

இந்திய தொழிற்கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நல நிதியம் (யுனிசெப்) ஆகிய அமைப்புகளின் சார்பில் ‘தரமான மற்றும் நிலைத்த கல்வி’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நேற்று, சென்னையில் நடைபெற்றது.

இதன் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், “நாடு முழுவதும் 13 லட்சத்துக்கும் அதிகமான பள்ளிகள் உள்ளன. அதில் 80 சதவீதம் அரசுப் பள்ளிகளாகவும், 37 சதவீதம் கிராமப்புறங்களிலும் உள்ளன. தேசிய அளவில் அரசுப் பள்ளிகள் தான் கல்வி வளர்ச்சியில் பெரும் பங்காற்றுகின்றன. நம்நாட்டில் உயர்கல்வி பெறுபவர்கள் சராசரி 28.5 சதவீதமாக உள்ளது. அதை விட கூடுதலாக தமிழகத்தில் 46 சதவீதம் பேர் உயர்கல்வி பெற்று வருகின்றனர். இந்த எண்ணிக்கை சீனாவில் கூட 39 சதவீதமே உள்ளது.” என்றார்.

இந்து தமிழ்

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: