தமிழக இளைஞர் சிங்கப்பூரில் மர்ம மரணம்!

தமிழக இளைஞர் சிங்கப்பூரில் மர்ம மரணம்!

தமிழக இளைஞர் சிங்கப்பூரில் மர்ம மரணம்!

சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்ற சேலம் மாவட்ட இளைஞர் மர்மமான முறையில் இறந்ததாக அவரது பெற்றோர் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


மேட்டூர் அருகே உள்ள சேத்துகுழி கிராமத்தை சேர்ந்த விவசாயி கருமலை மகன் வெங்கடாஜலம் என்பவர் சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று அவர் பணியாற்றும் நிறுவனத்தில் இருந்து தங்களது மகன் இறந்துவிட்டதாக கருமலைக்கு தகவல் வந்தது. எனினும் அவர் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து விவரங்களை அவரது பெற்றோருக்கு தெரியப்படுத்தவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவி செய்ய வேண்டும் என உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: