புலிகளின் இயக்கத்திற்கு எதிரான கருத்துக்கள் இடம் பெற்றாலும், புலித் தலைவன் தான் அட்டைப் படம்!

sathiri_puthia_thalaimurai_bookஎன்னதான் புலிகளுக்கு எதிரான கருத்தாக இருந்தாலும், தமிழ் மக்கள் மனதில் இடம்பெற்ற தலைவன் பிரபாகரன் படம் போடாமல் எந்த புத்தகமும் இந்த பூலோகத்தில் விற்பனை ஆகாது என்கிற நிலை தான், சாத்திரியால் புதிய தலைமுறை இதழில் தொடராக எழுதிய ‘அன்று சிந்திய ரத்தம்’.

பிரபாகரனின் படம் புத்தகமாக போட்டு ஏற்கெனவே சிலர் விற்பனை செய்த போது கண்டித்தவர் தான் இந்த சாத்திரி. இன்று இந்த எதிர்ப்பு இவருக்கும் பொருந்துமா?

ஈழத் தமிழரான திரு. சாத்திரி புலிகளின் அமைப்பில் ஆரம்ப கால உறுப்பினராக இருந்து பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டவர். பின்னர் இவருடைய நிகழ்வுகளை தொகுத்து நாவலாக ஆயுத எழுத்து என்ற தலைப்பில் புத்தகமாக போடப்பட்டது. இவர் ஒரு சிறந்த எழுத்தாளராகவும், தற்போது பிரான்ஸ் குடியுரிமை பெற்றவராகவும் இருந்து வருகிறார்.

– அக்னி, ஒருங்கிணைப்பாளர், உலகத் தமிழர் பேரவை.

Tags: 
%d bloggers like this: