ஒரே நாடு இருக்க வேண்டும், ஒரே மொழி இருக்க முடியாது : ஜக்கி வாசுதேவ் கருத்து!

ஒரே நாடு இருக்க வேண்டும், ஒரே மொழி இருக்க முடியாது : ஜக்கி வாசுதேவ் கருத்து!

ஒரே நாடு இருக்க வேண்டுமே தவிர, ஒரே மொழி என்பது இருக்க முடியாது என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார்.

‘காவிரி கூக்குரல்’ என்ற காவிரி பாதுகாப்பு இயக்கத்தைத் தொடங்கி இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணத்தை மேற் கொண்டுள்ள ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், திருவாரூர் மாவட்டத்தில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பட்டுக்கோட்டையில் இருந்து மன்னார்குடி வழியாக திருவாரூர் வந்தடைந்த அவரது குழுவினருக்கு பல்வேறு இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருவாரூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விவ சாயிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற சத்குரு ஜக்கி வாசுதேவ், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘காவிரி கூக்குரல்’ நிகழ்ச்சி விவசாயிகளிடையே விழிப்பு ணர்வை ஏற்படுத்தி உள்ளது. அதன் விளைவாகத்தான் ஏராள மான விவசாயிகளும் விவசாய சங்கத் தலைவர்களும் கலந்துரையாடலில் பங்கேற்று நல்ல கருத்துகளைப் பதிவு செய்துள்ள னர். காவிரியைப் பாதுகாக்கும் இந்த விஷயத்தில் விவசாயிகளின் பேராதரவு உள்ளது.

மொழிகளை ஆதாரமாகக் கொண்டுதான் இந்தியாவில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அப்போது அனைத்து மொழிகளுக்கும் ஆதரவு இருக்கும் என்ற நம்பிக்கையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. ஒரே நாடு இருக்க வேண்டுமே தவிர, ஒரே மொழி என்பது இருக்க முடியாது. இந்தியாவில் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகளை நாம் பயன்படுத்தி வருகிறோம். அதே நேரத்தில் பிற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை. வருங்கால தலைமுறையினர் 4 மொழிகளையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: