ஒன்றையே விரும்பிப் பார்க்கும். கன்_கண்_காண் என விரிந்து விருப்பமான ஒன்றை காண்மம் என்றவாறு கவனித்தது. காண்மம் என்பதற்கு விருப்பம் என்பதே பொருளாகும் காண்மம் – காமம் எனப்பட்டது. காமம் விருப்பத்தையே குறிக்கும்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.
“கொங்கு தேர்வாழ்க்கை,
அம் சிரைத் தும்பி,
காமம் செப் பாது கண்டது மொழி மோ”
என்று குறுந்தொகை (3:1-2) கூறுகிறது. காமம் என்பது, இங்கு விருப்பம் என்றே சொல்லப்பட்டுள்ளது.
சமற்கிருதம், காமம் என்ற சொல்லை , காமா எனத் திரித்துக் கொண்டு , பாலுணர்வு தொடர்பான வன்மச் சிந்தனையைக் குறிக்கிறது. சமற்கிருதப் பொருளையே நம்மில் பலர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
மக்கள் விரும்பிச் சென்று குடியேறும் குடியிருப்புகள் காமம் என்றே சொல்லப்படும். கதிர்காமம் என்ற ஊரை ஒப்பு நோக்குக காமம் என்பது ஊரைக் குறிக்கும். அச்சொல்லே, சமற்கிருதத்தில் கிராமம் என்று திரிந்தது
காமம் :
பல நூறு தமிழ்ச் சொற்களை, அவற்றின் வேரும் மூலமும் அறியாது, தமிழறிஞர்களில் சிலரே, அவற்றை , சமற்கிருதச் சொற்கள் என்று, தவறாகக் கூறி வருகின்றனர். அவற்றுள் காமம் என்ற சொல்லும் ஒன்று. கன் என்ற வேர்ச்சொல் , கண் என நீண்டது. இரண்டும் கறுமையைக் குறிக்கும் சொற்களாகும். கண், கறுமை நிறமானதே. கண் என்ற பெயர்ச்சொல், காண் என்ற வினைச் சொல்லாக விரிந்தது. கண், பலவற்றைக் கண்டாலும் குறிப்பிட்ட ஒரு பொருளையே கூர்ந்து நோக்குகிறது. அந்நோக்கிற்குக் காரணம், அப்பொருள், கண்ணால் ஈர்க்கப்படுவதே. கண் – விருப்பமான….
– மா.சோ.விக்டர்