ஒலிம்பிக்கில் தமிழர்களுக்கு பதக்கம் இல்லையெனினும், போட்டிகளை நடத்தும் குழுவில் இருந்து பெருமை சேர்த்தார் ஒரு தமிழக இளைஞர்!

rio_olympic_ahamed_sulaimanஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்யும் குழுவில் தமிழகத்தை சேர்ந்த மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் காயல்பட்டணம் அகமது சுலைமான் இடம் பெற்றிருந்தார்.

துபாயில் பணிபுரிந்து வந்த இவர் துபாயில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் முழுமையான தூரத்தை (42.195 கிலோ மீட்டர்) நிறைவு செய்தார். அதன் பின்னர் துபாயில் நடைபெறும் மாரத்தான் போட்டிகளில் தன்னார்வ தொண்டராக குழுவினருடன் பங்கேற்றார்.

ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் குழுவில் இடம் பெற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அந்த குழுவிலும் இடம் பெற்றார். குறிப்பாக குதிரைப் பந்தயம் நடைபெறும் பகுதியில் பணியினை செய்து வந்தார்.

ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்தவர் எவரும் பதக்கம் பெறாவிடினும் அந்த போட்டிகளை ஏற்பாடு செய்யும் குழுவில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் இடம் பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

இவர் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இளம் வீரர்களை ஒலிம்பிக்கில் பங்கேற்க ஆர்வ மூட்டுவதே தனது இலட்சியம் என தெரிவித்துள்ளார்.

விரைவில் மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியை ஏற்பாடு செய்யும் குழுவிலும் பங்கேற்க இருக்கிறார்.

நன்றி : தி இந்து

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: