இன்று கோவையில் சிறைச்சாலை முற்றுகைப் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது!

 
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இன்று (08-01-2022) பகல் பொழுதில் அக்கட்சியில் தலைவரும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. தமிமுன் அன்சாரி தலைமையில், நீண்ட காலமாக ஆயுள் தண்டனை பெற்று சிறைச்சாலைகளில் வாடும் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி, அமைதியான முறையில் கோவையில் முற்றுகைப்போராட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் திரு. ஹாரூன் அவர்கள் முன்னின்று இந்த போராட்டத்தை சிறப்பாக செய்து முடித்தார்.
 
சிறப்பழைப்பாளர்களாக தமிழ் தேசிய இயக்கத்தினரும், மனித உரிமை ஆர்வலர்களும், சகோதர ஆதரவு இயக்கத்தினரும் பங்கெடுத்து சிறப்பித்தனர்.
 
கொரோனா தொற்று அதிகமாகி வரும் இவ்வேளையிலும், பல்லாயிரம் மக்கள் கட்சி சார்பற்று பங்கு கொண்டது, முற்றுகைப் போராட்டத்தை மேலும் சிறப்படைய செய்தது.
 
இந்த இக்கட்டான சூழலிலும், முற்றுகைப் போராட்டத்தின் வெற்றி, மத்திய – மாநில அரசுகளின் செவிகளில் விழுந்து, உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதையே நமது “உலகத் தமிழர் பேரவை” கோரிக்கையாக வைக்கிறது.
 
அக்னி சுப்ரமணியம்
உலகத் தமிழர் பேரவை
 
 
 
 
 
 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: