மாமல்லபுரம் சிற்பமும், சோழர் கடற்படையும் தமிழக பொறியியல் திறனுக்கு சான்று: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பாராட்டினார்!

மாமல்லபுரம் சிற்பமும், சோழர் கடற்படையும் தமிழக பொறியியல் திறனுக்கு சான்று: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பாராட்டினார்!

மாமல்லபுரம் சிற்பமும், சோழர் கடற்படையும் தமிழக பொறியியல் திறனுக்கு சான்று: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பாராட்டினார்!

”ஆயிரம் ஆண்டுக்கு முன், இந்திய பெருங்கடலில், ஆதிக்கம் செலுத்திய சோழர் கடற்படையும், அதற்கு முன் உருவான மாமல்லபுரம் கடற்கரை சிற்பங்களும், நீர் வடிகால் அமைப்புகளும், பொறியியல் திறனில், தமிழகம் முன்னோடியாக விளங்குவதற்கான சான்றுகள்,” என, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் கூறினார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இந்திய பொறியாளர்கள் நிறுவனத்தின், தேசிய மாநாட்டு நிறைவு நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:ஜனாதிபதியாக பதவியேற்ற பின், தமிழகத்திற்கு, நான் வருவது இதுவே முதல் முறை. இது, பொறியியல் வல்லுனர்கள் நிறைந்த பூமி மட்டுமன்றி, சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்திய, பல சமூக பொறியாளர்கள் வாழ்ந்த இடமுமாகும். ஒரு உறுதியான கட்டடம், அறிவியலும், தொழில்நுட்பமும் கலந்த கலவை. தமிழ் சமூகத்தை, அதனுடன் ஒப்பிடலாம்.

தமிழகத்தின் புகழ்மிக்க வரலாற்றை உற்று நோக்கினால், 1,000 ஆண்டுக்கு முன், சோழர் கடற்படை கப்பல்களும், வணிக கப்பல்களும், இந்திய பெருங்கடலில் வலம் வந்து, ஆதிக்கம் செலுத்தியதை அறியலாம்.அதற்கும் முன் உருவான, இன்றளவும் நம் சிந்தையை மயக்கும், மாமல்லபுரம் கடலோர சிற்பங்களும், அங்குள்ள சிறப்பான நீர் வடிகால் அமைப்புகளும், மற்றொரு சிறந்த, தமிழ் வம்சமான பல்லவர்களால் உருவாக்கப்பட்டவை.

அவை, நவீன பொறியியல் நுட்பத்திற்கு நிகரான உதாரணங்கள். தமிழகத்தைச் சேர்ந்த அப்துல் கலாம், மேலை நாட்டிற்கு சென்று, பெரும்பொருள் ஈட்டும் வாய்ப்பு இருந்தும், நாட்டிற்காக, வாழ்வை அர்ப்பணித்தவர். பொறியாளர்கள், மறைந்த அப்துல் கலாமை போன்று, அர்ப்பணிப்பு உணர்வுடன் இருக்க வேண்டும். ஈ.வெ.ரா., ராஜாஜி, அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என, சமூக பொறியாளர்கள் நிறைந்த தமிழகம், நவீன கால பொறியியல் துறையிலும், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, சிறப்பாக விளங்குகிறது.

பொறியாளர்கள், மாற்றத்தின் முகவர்கள். அவர்கள் நினைத்தால், நாடு எதிர்நோக்கியுள்ள முக்கிய சவால்களான, உணவு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில், குறைந்த செலவில், தரமான கட்டமைப்பை உருவாக்க முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.கவர்னர், பன்வாரிலால் புரோஹித் பேசுகையில், ”பொறியியல் கல்லுாரிகள், சர்வதேச அளவில் போட்டியிடும் வகையில், புதிய சிந்தனை திறன் மிக்க கல்வியை போதிக்க வேண்டும்,” என்றார். நிகழ்ச்சியில், தமிழக வருவாய் துறை அமைச்சர், உதயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: