ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு மீதான தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம் மனு!

ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு மீதான தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம் மனு!

ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு மீதான தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம் மனு!

ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு மற்றும் மாட்டு வண்டி திருவிழாக்கள் மீதான தடையை நீக்க நடவடிக்கை கோரி தொண்டு நிறுவனங்கள் சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு;

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் நிகழ்ச்சியின் போது கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:

ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போன்றவை இந்து கோவில் திருவிழாக்கள் மட்டுமின்றி கிறிஸ்தவ ஆலய திருவிழாக்களிலும் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகும். ஜல்லிக்கட்டு நடத்தும் மாவட்டங்களில் கிறிஸ்தவ ஆலயங்கள் சார்பிலும் ஜல்லிக்கட்டு நடத்தும் வழக்கம் உள்ளது. ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்கப்பட்டதால் ஜல்லிக்கட்டு இல்லாமல் கோவில் திருவிழாக்கள் நடத்துவது தெய்வ குற்றம் என மக்கள் நம்புகிறார்கள். இதனால் கோவில் திருவிழாக்கள் நிறுத்தப்பட்டு விட்டன. ஜல்லிக்கட்டு காளைகள் பராமரிப்பில் ஈடுபட்டு வந்த ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பு இழந்துள்ளனர். ஜல்லிக்கட்டு சாதி, மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகும்.

தடை;

இந்த நிலையில் 1992–ம் ஆண்டு ஏற்பட்டுள்ள சர்வதேச பல்லுயிர் பாதுகாப்பு உடன்படிக்கைக்கு முரணாக ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச உடன்படிக்கையின் படி ஜல்லிக்கட்டை காப்பது இந்திய அரசின் கடமையாகும். ஜல்லிக்கட்டு போன்றவற்றில் எந்த விதமான மிருக வதையும் இல்லை. இந்த தடையால் கிராம மக்கள் மனவேதனை அடைந்துள்ளனர்.

எனவே ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சு விரட்டு தடையை நீக்க மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம், தமிழக அரசு ஆகியோரிடம் பரிந்துரை செய்து தடையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது

ஜல்லிக்கட்டு நடத்த கோரி போராட்டம்;

மதுரை;

மதுரை; கலெக்டர் அலுவலகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்றனர். ‘பீட்டா’ அமைப்பை தடை செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என கூறினார்கள். அவர்கள் கூறுகையில், ‘ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கும் வரை போராட்டங்கள் தொடரும்,’ என்றனர். பின் அவர்கள் கலெக்டர் வீரராகவராவ்விடம் மனு கொடுத்தனர்.

ராணுவ வீரர்களை உருவாக்கும் ஜல்லிக்கட்டு: முறையாக அனுமதி வழங்க வேண்டுகோள்;

ஈரோடு:

‘ராணுவ வீரர்களை உருவாக்கும் பயிற்சிகளமான ஜல்லிக்கட்டுக்கு, முறையான அனுமதியை வழங்க வேண்டும்’

தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. கலாச்சாரத்தின் அங்கமாக, மஞ்சு விரட்டு, ஏறு தழுவுதல், ஜல்லிக்கட்டு என, சங்க காலத்தில் வீர விளையாட்டு நடத்தப்பட்டது. திமில் அதிகமாக உள்ள பாரம்பரியமான கால்நடைகளை கொண்டு நடத்தப்படும் விளையாட்டாகும். திமில் இல்லாத காளைகளை கொண்டு ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளில் காளை விளையாட்டுக்கள் நடத்தப்படுகிறது. அங்கு திமில் இருக்கும் இடத்தில் ஈட்டியில் குத்துவர். இதனால், காளை சினம் கொண்டு எழும். காளைகளை அடக்கும் வீரர்கள், காளைக்கு போக்கு காட்டுவர். சோர்வடையும் காளை இறுதியில் இறந்து போகும். ஆனால், ஜல்லிக்கட்டு காளைகள் இறப்பதோ, கால் முறிவதோ இல்லை. இது தழுவும் விளையாட்டாகும்.

ஜல்லிக்கட்டு பற்றிய புரிதல் இல்லாத காரணத்தால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலை நாட்டின் ஜல்லிக்கட்டுடன், இங்கு நடப்பதை ஒப்பிட்டதால், தடை விதிக்கப்பட்டது. தமிழக அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், வெளிநாட்டு சதியும் இருப்பதாக கருதப்படுகிறது. ஜல்லிக்கட்டு வீர விளையாட்டாக உள்ளதால்தான், இந்த இனம் சிலரால் பாதுகாக்கப்படுகிறது அல்லது இந்த இனங்கள் அனைத்தும் அழிந்து போகும். மத்திய அரசில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள், ஜல்லிக்கட்டு தடையை நீக்க தொடர்ந்து முயல வேண்டும். தடையை நீக்கம் செய்ய வைத்து, இந்த வீர விளையாட்டை நடத்த வேண்டிய பணிகளை, செய்ய வேண்டும்.

ஜல்லிக்கட்டு தடையால் கோயில் விழாக்கள் நிறுத்தம்;

சிவகங்கை:

ஜல்லிக்கட்டு தடையால் தமிழகத்தில் ஏராளமான கிராம கோயில் விழாக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கிராம கோயில், சர்ச் விழாக்களையொட்டி பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டன. அவற்றிற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனால் பல கிராமங்களில் கோயில் விழாக்கள் நடத்துவதையே நிறுத்தி விட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட கோயில் விழாக்களில் மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டு வந்தது. தடை விதிக்கப்பட்டதால் காளைகளை அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டை அனுமதிக்க வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்….


அவர்கள் கூறியதாவது:

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு தடையால் நாட்டு மாட்டினங்கள் அழிந்து வருகின்றன. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்தினால் மட்டுமே நாட்டு மாடு, விவசாயத்தை மீட்க முடியும். இதற்காக மிருகவதை தடுப்புச் சட்டம் 1960 ல் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: