அலங்காலூர் ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி: வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி பேட்டி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு போட்டியில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் வீரபாண்டியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கால்நடை மருத்துவ முகாமை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

கால்நடைகளுக்கு கோமாரி உள்ளிட்ட நோய்கள் பரவி வரும் சூழலில் அதனை தடுக்கும் விதமாக பரிசோதனை செய்யப்படுகிறது. முகாமை தொடங்கிவைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி அலங்காலூர் ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்தார். நாட்டு இன மாடுகளை அதிகப்படுத்த அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் எனவும் அவர் கூறினார்.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: