“ஏறுதலுவுதல் (ஜல்லிக்கட்டு) நடைபெறுவதை நிச்சயம் உறுதி செய்வோம்” – தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்!

ஏறுதலுவுதல் (ஜல்லிக்கட்டு) விவகாரத்தில் எள்ளளவும் பின்வாங்க மாட்டோம் எனவும், ஏறுதலுவுதல் நடைபெறுவதை நிச்சயம் உறுதி செய்வோம் எனவும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் !

ஏறுதலுவுதல் (ஜல்லிக்கட்டு) விவகாரத்தில் எள்ளளவும் பின்வாங்க மாட்டோம் எனவும், ஏறுதலுவுதல் நடைபெறுவதை நிச்சயம் உறுதி செய்வோம் எனவும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் !

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏறுதலுவுதல் போட்டிகள் நடைபெறவில்லை. எனவே இந்தாண்டாவது பொங்கலின் போது ஏறுதலுவுதல் போட்டிகளை நடத்த வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஏறுதலுவுதல் விவகாரத்தில் தமிழக அரசு எள்ளளவும் பின்வாங்காது எனவும், ஏறுதலுவுதல் நடைபெறுவதை நிச்சயம் உறுதி செய்வோம் எனவும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு ஏறுதலுவுதல் நடத்த ஏதுவாக மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டுமென எழுதிய கடிதத்திற்கு இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்று தெரிவித்துள்ளார். பீட்டா உள்ளிட்ட அமைப்புகளால் கடந்த 2014-ம் ஆண்டு ஏறுதலுவுதலுக்கு உச்சநீதிமன்றம் முற்றிலும் தடை விதித்து விட்டது என்றும், தமிழக அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது என்றும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


தமிழர்களின் பண்பாடு, கலாசாரம் கட்டிக்காக்கப்படும் என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்திற்கு முரணாக தமிழக அரசால் சட்டம் இயற்ற இயலாது எனவும் தெரிவித்துள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டு திமுக அரசு கொண்டு வந்த சட்டத்தை பிராணிகள் வதை தடுப்பு சட்டத்திற்கு எதிரானது என உச்சநீதிமன்றம் ரத்து செய்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்தில் ஏறுதலுவுதல் நடத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ள தமிழக அரசு, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஏறுதலுவுதலுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு, திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை தான் காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ள ஓ.பன்னீர்செல்வம், அரசியல் ஆதாயத்துக்காக தமிழக நலனை விட்டுக் கொடுக்க திமுக முற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறிய கருத்துப்படி, மாநில அரசு அவசர சட்டத்தை கொண்டுவர முடியாது என்றாலும், தமிழகத்தில் ஏறுதலுவுதல் நடைபெறுவதை உறுதி செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார். இதில் எள்ளளவும் பின்வாங்க மாட்டோம் என்று கூறியுள்ள முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரத்தை கட்டிக்காப்போம் என்பதை உறுதிபட தெரிவிப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களின் பண்பாடான ஏறுதலுவுதலை நடத்துவோம் என சூழுரைத்த  தமிழக முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்களை உலகத் தமிழர் பேரவை வாழ்த்துகிறோம்.. – ஒருங்கிணைப்பாளர்.

Tags: ,

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: