”மதுரை ஆதின மடத்திற்குள் நித்யானந்தா வந்தால் கைது செய்யப்படுவார்”-மதுரை ஆதினம் ஹரிஹரி ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் எச்சரிக்கை .

“மதுரை ஆதின மடத்திற்குள் நித்யானந்தா வந்தால் கைது செய்யப்படுவார்” என மதுரை ஆதினம் ஹரிஹரி ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் எச்சரித்துள்ளார்.

இம்மடத்தின் 292வது பீடாதிபதி அருணகிரி நாதர் இறந்ததை தொடர்ந்து, நித்யானந்தா அடுத்த ஆதினமாக தன்னைத்தானே அறிவித்துக்கொண்டார். இச்சூழலில் ஆக.,23ல் மதுரை ஆதினமாக ஹரிஹரி ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பேற்றார். நேற்று மதுரை வ.உ.சி., சிலை திறப்பில் பங்கேற்றவர், நித்யானந்தா குறித்து கூறுகையில் ‘அவன் ஒரு பொருட்டே இல்லை. மடத்திற்குள் நுழைந்தால் கைது செய்யப்படுவான்’ என்றார். தொடர்ந்து அவர் கூறியதாவது: மதுரை ஆதின மடத்தின் சார்பில் தமிழாகரன் என்ற நுால் குரு பூஜையன்று வெளியிடப்பட உள்ளது. தவிர 5 விருதுகள் வழங்கப்பட உள்ளன.

சிறந்த ஓதுவாருக்கு ஞானசம்பந்தர் விருதும், சைவ சமயத்தில் சிறப்பாக செயல்படும் பெண்மணிக்கு மங்கையர்க்கரசி விருது, மடத்திற்கு வெள்ளி தேர் செய்து கொடுத்த பாண்டித்துரை தேவர் பெயரில் ஒரு விருது, தியாகத்திற்காக வ.உ.சி., விருது, மதுரை ஆதினத்திடம் தீட்சை வாங்கிய வள்ளலார் பெயரில் ஒரு விருதும் வழங்க உள்ளோம். எந்நேரமும் மடத்திற்கு வந்தால் அன்னதானம் உண்டு. யார் வேண்டுமானாலும் மடத்திற்கு வரலாம். கதவுகள் திறந்தே இருக்கும். எல்லா அரசியல் கட்சி தலைவர்களுடன் நட்பு பாராட்டுவேன். மதநல்லிணக்கம் உடைய ஆதினமாக இருக்க நான் தயார். சமூக நல்லிணக்க மாநாடுகளுக்கு அழைத்தால் செல்வேன் என்றார்.

நன்றி : தினமலர்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: