தமிழில் புது எழுத்துருக்கள்: எதிர்த்த மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது!

தமிழில் புது எழுத்துருக்கள்: எதிர்த்த மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது!

தமிழில் புது எழுத்துருக்கள்: எதிர்த்த மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது!

கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்காக தமிழில் புதிதாக, 55 எழுத்துருக்களை உருவாக்கும், திட்ட முன்வரைவை திரும்பப் பெற கோரி, பதிவான வழக்கை, உயர் நீதிமன்ற மதுரை கிளைதள்ளுபடி செய்தது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


மதுரை, ஆனந்தபாண்டியன் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியதாவது:

தமிழை கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் மாற்ற, 55 தனி எழுத்துருக்களை உருவாக்க, சென்னை தமிழ் இணைய கல்விக் கழகம் முடிவு செய்தது. இதற்காக, அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு, புதிதாக, 55 தனி தமிழ் எழுத்துருக்களை உருவாக்கி, தமிழ் இணைய கல்விக் கழக இயக்குனரிடம் பரிந்துரைத்தது. அந்த திட்ட முன்வரைவை, அமெரிக்கா – கலிபோர்னியாவில் உள்ள, ‘சர்வதேச யுனிகோடுகூட்டமைப்பு’ என்ற தனியார் நிறுவன ஒப்புதலுக்கு இயக்குனர் அனுப்பினார். ஏற்கனவே, தமிழக அரசின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை, 2010-ல் தமிழ் எழுத்துருக்களை வடிவமைத்து வெளியிட்டது.

அதற்கும், தற்போது நிபுணர் குழு பரிந்துரைத்துள்ள, எழுத்துருக்களுக்கும் வேறுபாடு உள்ளது.

தமிழ், செம்மொழி அந்தஸ்து பெற்றுள்ளது. எழுத்துரு உருவாக்கம் செய்வதற்கு முன் வரலாறு, கணிதம், தொல்லியல், ஓலைச்சுவடி நிபுணர்களிடம் ஆலோசனை செய்திருக்க வேண்டும்.

அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. புதிய எழுத்துருக்களால் தமிழில் வேற்று மொழி கலப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சர்வதேச யுனிகோடு கூட்டமைப்பிற்கு, தமிழ் இணைய கல்விக் கழக இயக்குனர் அனுப்பிய, 55 எழுத்துருக்கள் உருவாக்கத்திற்கான திட்ட முன்வரைவை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

ஏற்புடையதல்ல :

நீதிபதிகள், கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு பிறப்பித்த உத்தரவில்,’இது தொடர்பான அரசாணையை எதிர்த்து, மனுதாரர் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, இம்மனு ஏற்புடையதல்ல. அரசாணைக்கு எதிராக மனு செய்து, நிவாரணம்தேட உரிமை அளிக்கப்படுகிறது. மனுவை தள்ளுபடி செய்கிறோம்’ என்றனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: