“நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளனை விடுதலை செய்யலாம்!” – தமிழக அரசுக்கு சிறைத்துறை பரிந்துரை!

"நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளனை விடுதலை செய்யலாம்!" - தமிழக அரசுக்கு சிறைத்துறை பரிந்துரை!

“நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளனை விடுதலை செய்யலாம்!” – தமிழக அரசுக்கு சிறைத்துறை பரிந்துரை!

நளினி, முருகன், பேரறிவாளன் மற்றும் சாந்தன் ஆகியோரை சிறையில் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யலாம் என சிறைத்துறையினர் தமிழக அரசுக்குப் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


அண்ணா பிறந்த தினம், காந்தி ஜெயந்தி போன்ற தலைவர்கள் பிறந்த நாள்களில், சிறையில் தண்டனை அனுபவித்துவரும் கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் தமிழக அரசு விடுதலை செய்து வருகிறது. இதனிடையே தமிழகச் சிறையில் பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்துவரும் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் எனப் பல்வேறு கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையடுத்து திண்டுக்கல்லில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ’தமிழகச் சிறையில் ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகளை சட்டம் மற்றும் சிறை விதிகளுக்கு உட்பட்டு மனிதாபிமான அடிப்படையில், முன்விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதியளித்தார். அதன்படி கடந்த 1-ம் தேதி தமிழக அரசு ஓர் அரசாணையை வெளியிட்டது. அதில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான வழிகாட்டுதல்கள், நிபந்தனைகள் குறித்த விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

தமிழக அரசின் அரசாணையைத் தொடர்ந்து தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்ட்டி, தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறை அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைத்தார். ’10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை நல்லொழுக்கம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான பட்டியலைத் தயாரித்து வழங்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் பற்றிய கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள கைதிகள் பட்டியலில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி ஆகியோர் பெயரும் இடம் பெற்றுள்ளன. சிறைத்துறை அதிகாரிகள் பரிசீலித்த பெயர்களை தமிழக அரசுதான் இறுதி செய்யும்!

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: