கீழடியில் ஒரு கோடி ரூபாயில் அருங்காட்சியகம் – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

கீழடியில் ஒரு கோடி ரூபாயில் அருங்காட்சியகம் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

கீழடியில் ஒரு கோடி ரூபாயில் அருங்காட்சியகம் – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

”சிவகங்கை மாவட்டம், கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை பாதுகாக்கவும், அகழாய்வு தொடரவும், அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்,” என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


சட்டசபையில், நேற்று கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:

சிவகங்கை மாவட்டம், கீழடி அகழாய்வில், 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய, தமிழர்களின் நகர நாகரிகம் கண்டறியப்பட்டு உள்ளது. அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்களை பாதுகாக்க, அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். தற்போது, கண்டறியப்பட்டுள்ள நகர நாகரிகம், ஹரப்பா மெகாஞ்சதாரோ நாகரிகத்திற்கு முந்தையது என, தெரிய வந்துள்ளது. என அ.தி.மு.க., – மாரியப்பன் கென்னடி கூறினார்.

தி.மு.க., – தங்கம் தென்னரசு கூறியதாவது – தமிழகத்தில் இதுவரை நடந்த அகழாய்வுகளுக்கும், கீழடி அகழாய்வுக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. இதுவரை, மயான பகுதிகளில் அகழாய்வு நடந்தது. தற்போது கீழடியில், மக்கள் குடியிருப்பு பகுதியில், அகழாய்வு நடத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம், மிகப்பெரிய நகர நாகரிகத்தை, தமிழர்கள் பின்பற்றியது தெரிய வந்துள்ளது.

இந்த அகழாய்வில் ஈடுபட்ட அமர்நாத் என்பவரை, மத்திய அரசு இடமாற்றம் செய்துள்ளது. அவரை மீண்டும் அங்கு பணியமர்த்த, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு, அகழாய்வை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை பாதுகாக்க, அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது – இங்கு நடத்தப்பட்ட அகழாய்வில், 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட, கட்டடப் பகுதிகள், கழிவுநீர் குழாய்கள், பானைகள் போன்றவை வெளிப்பட்டு உள்ளன. மொத்தம், 4,125 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. அவற்றை கொண்டு, அருங்காட்சியகம் அமைக்க, கீழடி கிராமத்தில், இரண்டு ஏக்கர் நிலம் தரும்படி, மத்திய தொல்பொருள் துறை கேட்டது; அதன்படி, நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அங்கு, ஒரு கோடி ரூபாயில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

தி.மு.க., – துரைமுருகன் சொன்னதாவது – வைகை நதிக்கரையோரம், ஒரு நகரம் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இது, வரலாற்றை புரட்டி போடக் கூடிய ஆய்வு. மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகத்திற்கு முந்தையது, தமிழர்களின் நகர நாகரிகம் என்பதற்கு சான்றாக, இது அமைந்துள்ளது. இந்த அகழாய்வு தொடர, தமிழக அரசு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது : தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: