கரூர் மாவட்டத்திற்கு வந்த வரலாறு, கலை, கலாச்சாரம், சமூகம், பண்பாடு மற்றும் அறிவியல் தொடர்பான தொடர்பான விபரங்களை விளக்கும் அருங்காட்சியக உலாப் பேருந்தினை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பார்வையிட்டார்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
தமிழ்நாட்டின் வரலாறு, கலை, கலாசாரம், சமுகம், பண்பாடு மற்றும் அறிவியல் தொடர்பான விபரங்களை விளக்கும் வகையில் அருங்காட்சியக உலாப் பேருந்து உருவாக்கப்பட்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டு, பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களின் பார்வைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இப்பேருந்து கரூர் மாவட்டத்திற்கு இன்று வந்தடைந்துள்ளது. மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ள இப்பேருந்தினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் அரசுப்பள்ளி மாணவ,மாணவிகள் இந்தப்பேருந்திணை பார்த்துப் பயன்பெறும் வகையில் தகுந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருக்கு அறிவுரை வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறுகையில், “சென்னை அருங்காட்சித்தின் பல்வேறு பிரிவுகளான தொல்லியல், மானிடவியல், கலை, விலங்கியல், தாவரவியல், சிறுவர் அருங்காட்சியகம் மற்றும் நாணயவியல் ஆகியவற்றின் சிறப்புகள் காண்போரை கவரும் வண்ணம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தொல்லியல் பிரிவில் சிந்துசமவெளி, தென்னிந்தியச் சிற்பக்கலை, சைவ, வைணவப் படிமங்கள், அமராவதி சிற்பங்கள், புத்தசமண சிற்பங்கள், குப்தர்கள், சோழர்களின் நாணயமாதிரிகள், பாறை மற்றும் குகை ஓவியங்கள், இசைக் கருவிகளின் புகைப்படங்கள், ராஜா ரவிவர்மாவின் ஓவியங்கள், கடலின் பவளங்கள், கிளிஞ்சல்கள் மற்றும் கனிம வகைகளின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. 1851ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியாவின் இரண்டாவது பழமையான சென்னை அரசு அருங்காட்சியத்தினை நேரில் பார்ப்பதுபோன்ற ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இந்த பேருந்து உருவாக்கப்பட்டுள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்களிடையே அருங்காட்சியகம் பற்றிய விழிப்புணர்வினை இந்த உலாப் பேருந்து ஏற்படுத்தும், இப்பேருந்தினை இலவசமாக கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், இன்று (23.07.2018) பிற்பகலில் கரூர் அரசு கலைக்கல்லூரியிலும், 24.07.2018 அன்று முற்பகலில் கரூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும், பிற்பகலில் சி.எஸ்.ஐ மேல்நிலைப் பள்ளியிலும் பார்வையிட்டு பயன்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்தினைக் கண்டுகளித்து மாணவ-மாணவிகள் பயன் பெற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.