பேரா. இ. சுந்தரமூர்த்தி அவர்களுடன் திரு.அக்னி சுப்பிரமணியம் சந்திப்பு!!!

பேரா. இ. சுந்தரமூர்த்தி அவர்கள் தமிழறிஞர், பேராசிரியர், எழுத்தாளர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவராவார். அவர் டிசம்பர் 19, 2001 முதல் டிசம்பர் 18, 2004 வரை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியற்றியவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியத்துறைகளில் தலைவர், பதிப்புத்துறைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் 32 ஆண்டுகள் பணியாற்றியவர். செம்மொழி நிறுவனத்தில் 2008 முதல் 2014 வரை முதுநிலை ஆராய்ச்சியாளராக இருந்துள்ளார்.
 
தற்போது அதே, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவராக (Vice Chairperson) மத்திய அரசால் அன்மையில் நியமிக்கப்பட்டார். அவரை வாழ்த்து வகையில், உலகத் தமிழர் பேரவை-யின் தலைவர் அக்னி சுப்ரமணியம் இன்று (09-12-2021) செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு நேரிடையாக சென்று பொன்னாடை போர்த்தி வாழ்த்தி வந்தார்.
 
அக்னி சுப்ரமணியம்
உலகத் தமிழர் பேரவை

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: