அக்டோபர் மாதம் மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி – சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு!

அக்டோபர் மாதம் மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி – சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு!

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில், இந்தியா – சீனா இடையிலான வர்த்தக மாநாடு அக்டோபரில் நடக்க உள்ளது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்துப் பேச உள்ளனர்.

இருநாட்டு தலைவர்கள் வருவதால், மாமல்லபுரத்தின் பல்வேறு பகுதிகளையும், பாதுகாப்பு அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், பிரதமர் மற்றும் சீன அதிபர் தங்கும் விடுதி, இருவரும் பார்வையிடும் பகுதிகள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்துகின்றனர்.

இதைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலர் கே.சண்முகம் தலைமையில் பாதுகாப்பு தொடர்பான ஆலோச னைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மத்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள், பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள், தமிழக உள்துறைச் செயலாளர் நிரஞ்சன்மார்டி, டிஜிபி ஜே.கே.திரிபாதி, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள் ளிட்டோர் பங்கேற்றனர். சீன அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகளும் விரைவில் மாமல்லபுரம் வரவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: