தமிழ்க் கலாச்சாரத்தை அழித்து, பன்மொழியினரின் பூமியாகிறது திருப்பூர் மாவட்டம்!

தமிழ்க் கலாச்சாரத்தை அழித்து, பன்மொழியினரின் பூமியாகிறது திருப்பூர் மாவட்டம்!

தமிழ்க் கலாச்சாரத்தை அழித்து, பன்மொழியினரின் பூமியாகிறது திருப்பூர் மாவட்டம்!

திருப்பூர் பன்மொழியினரின் பூமி கலவையான ஒரு கலாச்சார நிலமாக மாறியுள்ளது. அங்குள்ள தொழிலாளர்கள் பலரும் பீகார், ஒடிசா, ஜார்கண்ட், தெலுங்கானா, ஆந்திரா-விலிருந்து வந்திறங்கியுள்ள வடக்கத்தியர்கள். ஒவ்வொரு நாளும் திருப்பூர் ரயில் நிலையத்தில் அதிகாலையில் வந்து சேரும் ரயில்களிலிருந்து நூற்றுக்கணக்கானவர்கள் இறங்குகிறார்கள். ஒரு கணக்கெடுப்பின்படி 1.5 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இவ்வாறு இங்கு திருப்பூரில் குடியேறியுள்ளனர். இவர்களைத் தவிர ஆப்பிரிக்க நாட்டிலிருந்து நைஜீரியர்கள் பெருமளவு குடிபுகுந்துள்ளனர்.

இதனால் ஏற்பட்டுள்ள நுட்பமான தமிழ்க் கலாச்சார சிக்கல்கள் திருப்பூரின் சட்ட ஒழுங்கைக் கணிசமாகப் பாதித்துள்ளன. இதற்கிடையில் அரசின் பொருளாதார நடவடிக்கைகளோ பனியன் தொழிலுக்குச் சாதகமானதாக இல்லை. திருப்பூர் பனியன் உற்பத்தி என்பது ஏராளமான உபதொழில்களைச் சார்ந்தது. ஒரு பருத்தி ஆடையை உற்பத்தி செய்வதற்கான கண்ணியில் எண்ணற்ற கைகளின் பங்குள்ளது.

இந்தச் சிறு, குறுந்தொழில்கள் பலவும் அன்மைக் காலமாய் நசிந்து போயுள்ளன. நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமான பகுதியை ஈட்டித்தரும் தொழிலுக்கு உகந்த நடைமுறைகளையும் ஊக்கத்தையும் அளிப்பதன் வழியாகவே திருப்பூரை மீட்டெடுக்க முடியும். திருப்பூரில் இன்று பழைய முதலாளிகளும் இல்லை. பழைய தொழிலாளிகளும் இல்லை. பழைய திருப்பூரும் இல்லை என்கிறார் ஒரு நாவலாசிரியர்.

உண்மையிலேயே நசித்துவிட்டதா திருப்பூர்…அப்படி நசித்திருந்தால் ஏன் ஆப்பிரிக்கர்களும் வட இந்தியர்களும் அங்கே வந்து குடியேற வேண்டும்?

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: