அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

இன்று (செப்.,3) நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: அயோத்திதாச பண்டிதரின் 175-வது ஆண்டு விழாவையொட்டி வடசென்னையில் அயோத்தி தாசர் பண்டிதருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும். அயோத்திதாச பண்டிதரின் பெருமையை போற்றும் வகையில் மணிமண்டபம் அமைக்கப்படும். தமிழ் என்ற வார்த்தைகளை ஆயுதமாக பயன்படுத்திய மொழிப்புலவர் அயோத்திதாசர் பண்டிதர். தமிழக அரசியலை தமிழர், திராவிடம் ஆகிய இரண்டு சொற்களின்றி நடத்த முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: