இந்தியாவின் 2-வது அழகிய ரெயில் நிலையமாக மதுரை தேர்வு!

இந்தியாவின் 2-வது அழகிய ரெயில் நிலையமாக மதுரை தேர்வு!

இந்தியாவின் 2-வது அழகிய ரெயில் நிலையமாக மதுரை தேர்வு!

‘இந்தியாவின் அழகிய ரெயில் நிலையங்கள்’ என்ற தலைப்பில் மத்திய ரெயில்வே வாரியம் ஆய்வு செய்ததில் 2-வது அழகிய ரெயில் நிலையமாக மதுரை தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் உள்ள ரெயில் நிலையங்களை அழகுபடுத்தும்படி மத்திய ரெயில்வே வாரியம் உத்தரவிட்டது. அதன்படி மதுரை கோட்ட மேலாளர் நீனு இட்டியேரா உத்தரவின் பேரில் மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கோவில்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் ஓவியங்கள் வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

இத்தகைய சூழ்நிலையில் ‘இந்தியாவின் அழகிய ரெயில் நிலையங்கள்’ என்ற தலைப்பில் மத்திய ரெயில்வே வாரியம் ஆய்வு செய்தது. இதில் ‘மதுரை ரெயில் நிலையம்‘ 2-வது இடத்தை பெற்றுள்ளது.

இதற்கான பரிசளிப்பு விழா புதுடெல்லி ரெயில்வே வாரிய அலுவலகத்தில் நடந்தது. இதில் தலைமை விருந்தினராக பங்கேற்ற ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல், மதுரை ரெயில் நிலைய வளாகத்தில் ஓவியம் தீட்டிய கலைஞர்கள் ரமேஷ், கண்ணன் ஆகியோருக்கு ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: