சென்னையைச் சேர்ந்த, லிடியன் நாதஸ்வரத்துக்கு இளம் சாதனையாளர் விருது!

சென்னையைச் சேர்ந்த, லிடியன் நாதஸ்வரத்துக்கு இளம் சாதனையாளர் விருது!

உலக இளம் பியானோ இசைக் கலைஞரான, சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரத்துக்கு, சென்னை, கிழக்கு ரோட்டரி சங்கம், இளம் சாதனையாளர் விருதை வழங்கி கவுரவித்துள்ளது.

சென்னை, கிழக்கு ரோட்டரி சங்கம் ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் இளம் சாதனையாளர்களுக்கு, விருதுகளை வழங்கி கவுரவிக்கிறது. அந்த வகையில், இந்தாண்டு, கலைக்கான இளம் சாதனையாளர் விருதை, சென்னையைச் சேர்ந்த, பியானோ இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரத்துக்கு வழங்கி கவுரவித்துள்ளது.

விருது பெற்ற லிடியன் நாதஸ்வரம், 2 வயதிலிருந்து இசைப் பயிற்சி பெற்றவர். லண்டன் டிரினிட்டி இசைக் கல்லுாரியில், பியானோ இசையில், எட்டாவது கிரேடு பெற்றுள்ளார். தன், 13வது வயதுக்குள், தேசிய கலை மையம் உள்ளிட்ட, பல புகழ்பெற்ற அரங்குகளில் பியானோ வாசித்து, சிசிலி கோசென் ஷீல்ட், ஆமி டி ரோசாரியோ கோப்பை, பி.பி.ஜான் நினைவு பரிசு மற்றும் ராஜகோபால் மேனன் பரிசு உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். அவர் சமீபத்தில், அமெரிக்காவில் நடந்த, உலகின் சிறந்த திறமையாளருக்கான நிகழ்ச்சியில் பங்கேற்று, உலகின் சிறந்த பியானிஸ்ட் என்ற பட்டத்தை பெற்றதுடன், 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: