கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் நடுகல் மற்றும் பாறை கல்வெட்டுகள்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் நடுகல் மற்றும் பாறை கல்வெட்டுகள்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் நடுகல் மற்றும் பாறை கல்வெட்டுகள்!

கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலுார் – பேரிகைக்கு இடையே படுதே பள்ளியில், பழமையான பாறைக் கல்வெட்டு மற்றும் நடுகற்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இது குறித்து ஆய்வு நடத்திய, அறம் வரலாற்று ஆய்வு மைய தலைவர், கூறியதாவது:

படுதேபள்ளியில், பெண் தெய்வ உருவத்துடன், 10 அடி உயரமுள்ள, இரண்டு கல்துாண்கள் உள்ளன. துாண்களில், ஊஞ்சல் கட்டி, திருவிழாவின் போது, மாரியம்மன் சிலையை வைத்து, மக்கள் வழிபடுகின்றனர். துாண் சிற்பங்களின் அமைப்பு ஆராய்ச்சிக்கு உரியதாக உள்ளது. அங்கிருந்து சிறிது துாரத்தில், இடிந்து விழும் நிலையில், மண்கோட்டை சுவர்களும், நுழைவாயிலும் உள்ளன. அருகில், 14ம் நுாற்றாண்டைச் சேர்ந்த பெருமாள் கோவில் ஒன்று உள்ளது.

தொடர்ந்து சென்றால், பாறையில், தெலுங்கு மொழி கல்வெட்டு ஒன்று, சிதைந்த நிலையில் உள்ளது. இதே ஊரில், 13-14ம் நுாற்றாண்டுகளைச் சேர்ந்த, 10-ற்க்கும் மேற்பட்ட நடுகல்கள் உள்ளன.

போரில் இறந்த வீரன், பாம்பு கடியால் இறந்த வீரன், வாளை உயர்த்தி நடனமாடும் வீரர்களின் கல்வெட்டுகள் ஆங்காங்கே உள்ளன. ஒரு வீரனின் கையில், ஆங்கில எழுத்தான, ‘யு’ வடிவ ஆயுதமும் உள்ளது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த அனைத்து சின்னங்களும் எவ்வித பாதுகாப்பும் இன்றி, சிதறிக் கிடக்கின்றன. அவற்றை பாதுகாக்க தொல்லியல் துறை, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: