![தமிழ் சொல்வளம் நிறைந்த மொழி - கேரள ஆளுநர் சதாசிவம்!](https://worldtamilforum.com/wp-content/uploads/2019/01/Tamil-Kerala-Governor-Sathasivam.jpg)
தமிழ் சொல்வளம் நிறைந்த மொழி – கேரள ஆளுநர் சதாசிவம்!
தமிழ் சொல்வளம் நிறைந்த மொழி என்பதால்தான் இறை மொழி என்கிற பெருமை பெற்றுள்ளதுடன், இணையத்திலும் கோலோச்சி வருகிறது என்று கேரள மாநில ஆளுநர் சதாசிவம் கூறியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற 5-ஆம் ஆண்டு உலகத் தமிழர் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசுகையில் இதனைக் கூறினார். உலகில் உள்ள மூத்த எட்டு மொழிகளில் தமிழ் செம்மொழி என்கிற பெருமை பெற்றுள்ளது என்று குறிப்பிட்ட அவர், தனது பதவி காலம் முடிய இன்னும் 8 மாதங்களே உள்ளது என்றும், ராஜ்பவனில் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதித்ததுடன், எவர்சில்வர் பொருட்களை பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததையும் நினைவு கூர்ந்தார். நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றபோது பிரபல நிறுவனங்களில் இருந்து பணியாற்ற அழைத்தனர் என்றும் குறிப்பிட்டார்.