தமிழ், உள்ளிட்ட 24 மொழிகளில் கீழடி ஆய்வறிக்கை! – தொல்லியல் துறையின் புதிய முயற்சி!

தமிழ், உள்ளிட்ட 24 மொழிகளில் கீழடி ஆய்வறிக்கை! – தொல்லியல் துறையின் புதிய முயற்சி!

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 43-வது சென்னை புத்தகக் கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். வரும் 21-ம் தேதி வரை 13 நாள்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் இரண்டு கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. வார நாள்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரையும் விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் கண்காட்சி நடைபெறுகிறது.

கண்காட்சி அரங்குக்கு வெளியே `கீழடி – ஈரடி தமிழ் தொன்மங்கள்’ என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள தொல்பொருள் கண்காட்சியையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். கீழடி அகழாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட சுடுமண் குழாய், நீர் மேலாண்மைத் திட்டம், கறுப்பு சிவப்பு குவளைகள் உள்ளிட்டவைகளின் மாதிரியும் வைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், கீழடி அகழாய்வுப் பணிகள் குறித்து விளக்கும் ஒளிப்பட காட்சிக் கூடமும் அங்கு அமைக்கப்பட்டிருக்கிறது.

கீழடி அகழாய்வு முடிவுகளை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட 24 மொழிகளில் புத்தகமாகவும் தமிழகத் தொல்லியல்துறை வெளியிட்டிருக்கிறது. தமிழ் மற்றும் ஆங்கில பதிப்புகள் ரூ.50 என்ற விலையிலும் மற்ற மொழிப் பதிப்புகள் ரூ.200 என்ற விலையிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: