கீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது? தமிழக தொல்லியல் துறையிடம் நீதிமன்றம் கேள்வி!

கீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது? தமிழக தொல்லியல் துறையிடம் நீதிமன்றம் கேள்வி!

கீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது? தமிழக தொல்லியல் துறையிடம் நீதிமன்றம் கேள்வி!

கீழடியில் அகழ்வாராய்ச்சியில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விரிவான, பதில் மனு தாக்கல் செய்ய தமிழக தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த கனிமொழிமதி மற்றும் மதுரையைச் சேர்ந்த பிரபாகர் பாண்டியன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், கீழடியில் அகழ்வாய்வு பணியை தொடரவும், கண்டெடுக்கப்பட்ட பொருட்களை வைத்து அருங்காட்சியம் அமைக்க வேண்டியும் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், கீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு மேற்கொள்வது எப்போது?, ஏற்கனவே அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் நிலை என்ன என்பது பற்றி அதிகாரிகள் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்தனர். மேலும் வழக்கை 2019 ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: