கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள தமிழர்களின் வரலாற்று பொக்கிஷத்தை பாதுகாக்க முழு ஒத்துழைப்பு – அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன்!

கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள தமிழர்களின் வரலாற்று பொக்கிஷத்தை பாதுகாக்க முழு ஒத்துழைப்பு -  அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன்!

கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள தமிழர்களின் வரலாற்று பொக்கிஷத்தை பாதுகாக்க முழு ஒத்துழைப்பு – அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன்!

கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள தமிழர்களின் வரலாற்று பொக்கிஷத்தை பாதுகாக்க முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சுமார் 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் வாழ்ந்த நாகரிக வரலாற்றை பறைசாற்றும் கீழடியில் 3ம் கட்ட அகழ்வாராய்ச்சி செய்ய தமிழக அரசு முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியன் கூறியுள்ளார்.

மதுரை அருகே கீழடியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட போது அங்கு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வரலாற்று பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 5300 பண்டைய பொருட்களும் அங்கே கண்டறியப்பட்டன.

அரிய அகழ்வாராய்ச்சி இடமாக உள்ள கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்றும் தொடர்ந்து ஆய்வுகள் கொள்ள வேண்டும் என்றும் திமுக தலைவர் கருணாநிதி உட்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கோரி வந்தனர்.

இந்நிலையில், இன்று மதுரை கீழடி அகழ்வாராய்ச்சி பகுதிக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம், கீழடியில் 3ம் கட்ட அகழ்வாராய்ச்சி செய்ய தமிழக அரசு முழு ஒத்துழைப்பு தரும் என்று கூறினார்.

மேலும், கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆய்வுக்கு கொண்டு செல்ல கோர்ட் அனுமதிக்க வேண்டும் என்றும் கீழடியில் தொடர் ஆய்வுக்கு 2 ஏக்கர் நிலம் வழக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதே பகுதியில் அருங்காட்சியகம் ஒன்றும் அமைக்க ஆலோசித்து வருவதாகவும் மாஃபா பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>