கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு பணிகளைத் தொடர வேண்டும்; உயர்நீதிமன்ற அறிவுறுத்தல்!

கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு பணிகளைத் தொடர வேண்டும்; உயர்நீதிமன்ற அறிவுறுத்தல்!

கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு பணிகளைத் தொடர வேண்டும்; உயர்நீதிமன்ற அறிவுறுத்தல்!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வுப் பணிகளைத் தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


கீழடியில் 3 கட்டங்களாக நடத்தப்பட்ட அகழாய்வுப் பணிகள் அண்மையில் நிறைவடைந்தன. இதையடுத்து 4-ம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெறுமா? என்ற சந்தேகம் நிலவியது. இது தொடர்பாக வழக்கறிஞர் கனிமொழி மதி என்பவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

மத்திய தொல்லியல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அகழாய்வை தொடர்வதற்கான ஒப்பந்த உரிமம் கோரி தமிழக அரசு விண்ணப்பித்துள்ளதாகவும், தகுதி இருக்கும் பட்சத்தில், உரிமம் வழங்குவது குறித்து அகில இந்திய குழு முடிவு செய்யும் எனவும் தெரிவித்தார். இதையடுத்து பேசிய நீதிபதிகள், தமிழக அரசுக்கு அனுமதி வழங்க, மத்தியக்குழு நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்தனர்.

இதனிடையே, கீழடி அகழாய்வு கண்காணிப்பாளர் ஸ்ரீராம் ஆஜராகி தங்கள் தரப்பு பிரச்னைகளை நீதிபதிகளிடம் முன்வைத்தார். அப்போது அகழாய்வுப் பணிக்காக அங்குள்ள சிலர் நிலம் தர மறுப்பதாக தெரிவித்தார். இதனைக் கேட்ட நீதிபதிகள், நிலத்தைத் தர மறுப்பவர்கள் யார்? என்பது குறித்து 22-ம் தேதி தெரிவிக்க வேண்டும் எனவும், 4ம் கட்ட அகழாய்வை நடத்த மாநிலத் தொல்லியல் துறையினருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: