கீழடி அகழ்வாராய்ச்சி பொருட்கள் பற்றி மாணவர்களுக்கு விளக்க ஏற்பாடு!

கீழடி அகழ்வாராய்ச்சி பொருட்கள் பற்றி மாணவர்களுக்கு விளக்க ஏற்பாடு!

கீழடி அகழ்வாராய்ச்சி பொருட்கள் பற்றி மாணவர்களுக்கு விளக்க ஏற்பாடு!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தையில் தமிழக தொல்லியல் துறை சார்பில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பற்றிய விபரங்களை மாணவர்களுக்கு தெரியப்படுத்தும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த இரண்டு கட்ட அகழாய்வில் முத்திரை, அழகுசாதன பொருட்கள், கட்டடங்கள், வாறு கால்கள், உறை கிணறு உள்ளிட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

4-ம் கட்ட அகழாய்வு தமிழக தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம், உதவி இயக்குனர் சக்திவேல் தலைமையில் 55 லட்ச ரூபாய் செலவில் கடந்த மே 18ம் தேதி தொடங்கியது. சோணை மற்றும் கணேசன் என்பவரது தென்னந்தோப்புகளில் 33 குழிகள் தோண்டப்பட்டு களிமண் அச்சுகள், பானை ஓடுகள், தங்க அணிகலன்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் அதிகமான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. தமிழக தொல்லியல் துறை அகழாய்வு குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்க வில்லை.
செப்டம்பர் 30 ம் தேதியுடன் அகழாய்வு நிறைவு பெறுவதால் விரைவில் சிவகங்கை மற்றும் மதுரை மாவட்ட பள்ளி, கல்லுாரி மாணவர்களை அழைத்து கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிக்கு வைத்து தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் விளக்கமளிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>