தமிழக தொல்லியல் துறையால் கீழடியில் 4 ஆயிரத்து 700 பொருட்கள் கண்டு பிடிப்பு!

தமிழக தொல்லியல் துறையால் கீழடியில் 4 ஆயிரத்து 700 பொருட்கள் கண்டுபிடிப்பு!

தமிழக தொல்லியல் துறையால் கீழடியில் 4 ஆயிரத்து 700 பொருட்கள் கண்டுபிடிப்பு!

தமிழக தொல்லியல் துறையால் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் இதுவரை 4 ஆயிரத்து 700 பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அகழாய்வை பல்வேறு கட்ட தாமதத்திற்கு பின் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி நடந்து வந்துள்ளது.

தற்போது, கீழடி பள்ளிச்சந்தை புதுாரில் தமிழக தொல்லியல் துறை மூலம் நடைபெறும் 4ம் கட்ட அகழாய்வு டிசம்பர் வரை நடைபெறும் என தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில்,”அகழ்வராய்ச்சி ஏப்ரல் 19ல் தொடங்கியதால் செப்டம்பர் வரை முடிக்காமல் டிசம்பர் வரை தொடர்ந்து நடத்த முடிவு செய்யப்பட்டது. இதுவரை 26 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. டிசம்பர் வரை நடைபெறுவதால் மேலும் குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடத்தப்படும்,” என்றனர்.

அதே நேரம், கீழடியில் மத்திய தொல்லியல் துறை 6ம் பிரிவு சார்பாக 3ம் கட்ட அகழாய்வு நடந்து முடிந்துள்ளது. மத்திய தொல்லியல் துறை மார்ச்சில் தொடங்கி செப்டம்பர் மாதத்திற்கு பின் பருவ மழை தொடங்குவதால் அகழாய்வை தொடர்வது சிரமம் ஆகையால், அகழாய்வை முடித்து விடுவது வழக்கம்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: