குழந்தை எழுத்தாளர்களுக்கு ‘கவிமணி விருது’; அமைச்சர் அறிவிப்பு

 
 
குழந்தை எழுத்தாளர்கள், கவிமணி விருது, அமைச்சர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி
facebook sharing button
‛‛எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் விதமாக குழந்தை எழுத்தாளர்களுக்கு கவிமணி விருது வழங்கப்படும்,” என்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்க 18 வயதுக்கு உட்பட்ட எழுத்தாளர்களுக்கு கவிமணி விருது வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். 18 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கு ஆண்டுதோறும் மூன்று சிறந்த எழுத்தாளர்கள் தேர்வு செய்து ரூபாய் 25 ஆயிரம் ரொக்கம், கேடயம் மற்றும் சான்றிதழ் உடன் கவிமணி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறந்த கலெக்டர்கள், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு முதல்வரின் சிறப்பு விருது ஆண்டுதோறும் தரப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

நன்றி : தினமலர் 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: