ஜப்பான் சென்று வந்த உற்சாகத்தில் கரூர் அரசுப் பள்ளி மாணவன்!

ஜப்பான் சென்று வந்த உற்சாகத்தில் கரூர் அரசுப் பள்ளி மாணவன்!

ஜப்பான் சென்று வந்த உற்சாகத்தில் கரூர் அரசுப் பள்ளி மாணவன்!

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், கல்வாழையைக் கொண்டு கரூர் அரசுப் பள்ளி மாணவன் கண்டுபிடித்த கழிவறைக்காக, ஜப்பான் செல்லும் வாய்ப்பைப் பெற்றார். நோபல் பரிசு பெற்ற வேதியியல் விஞ்ஞானி, கால் மணி நேரம் காலதாமதம் ஆனதற்காக, எல்லா மாணவர்களிடமும் கடிதம் மூலம் மன்னிப்பு கேட்டதாக, மாணவர் பெருமிதமாகச் சொன்னார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


பள்ளிக் கல்வித்துறை, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்மூலம் அறிவியல் பாடத்தில் ஜப்பான், ஆசிய மாணவர்கள் பரிமாற்றத் திட்டம் மூலமாக அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் தேசிய அளவிலான அறிவியல் கண்டுபிடிப்புத் திறன்களை ஊக்குவிக்கும் பொருட்டு, அறிவியல் ஆர்வமுள்ள சிறந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஜப்பான் நாட்டின் அறிவியல் முன்னேற்றத்தைக் காணச் செய்வதுடன், அந்நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடவும் தமிழக அரசு மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. நடப்புக் கல்வியாண்டில், தமிழகம் சார்பாகக் கடந்த 12 – 19 -ம் தேதி வரை, ஜப்பான் சென்று வந்த 6 மாணவர்கள் கொண்ட குழுவில், கரூர் மாவட்டம்,வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 பயிலும் கல்லுமடை பெருமாள்பட்டி காலணியில் வசிக்கும் ஹரிஹரன் என்ற மாணவரும் இருந்தார். ஜப்பான் பயணத்தை வெற்றிகரமாக முடித்து, சொந்த ஊர் திரும்பினார் மாணவ விஞ்ஞானி ஹரிஹரன்.

ஹரிஹரன் கூறியதாவது:

“நான், இதுவரை கரூரைத் தாண்டியதில்லை. ஆனா, முதல்முறையா ஜப்பான் போய் வந்திருக்கிறேன். அதுவும் ஏழு நாள்கள். அப்பப்பா… இன்னும் என்னால நம்பவே முடியலை. சென்னையிலிருந்து டெல்லி, டெல்லியிலிருந்து டோக்யோ, டோக்கியோவிலிருந்து ஹில்ஸ்டேஷன் பகுதியான குயூசுன்னுன். மூணு விமானம் ஏறிப் போனேன். டொயோட்டா கம்பெனிக்கு அழைச்சுட்டு போய் சுத்திக் காண்பிச்சாங்க. இன்னோவேஷன் சென்டருக்கு கூட்டிட்டுப் போனாங்க. அங்கே, மெடிசினை தானாகத் தயாரிக்கும் ரோபோ, என்டர்டெய்ன்மென்ட் ரோபோக்கள், ஒரு ரோபோவை தயாரிக்கும் ரோபோக்கள் என்று 300 ரோபோக்களைப் பார்த்து வியந்தோம். அங்கே நடக்கும் அத்தனை வேலைகளையும் 75 சதவிகிதம் ரோபோக்கள்தான் செய்கின்றன. ஸ்பேஸ் சென்டருக்கு அழைசுட்டுப் போய், இதுவரை ஜப்பான் விண்வெளிக்கு ஏவிய ஏவுகணைகளைப் பற்றி விவரிச்சாங்க. அப்புறம், 2001-ம் வருடம் கெமிஸ்ட்ரியில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சானயனை ஒன்றரை மணி நேரம் சந்தித்துப் பேசினோம்.

அவர் சந்திப்புக்கு, சொன்ன நேரத்தைவிட கால்மணி நேரம் தாமதமாக வந்தார். அவர், அதற்காகத் தன் கைப்பட எழுதிய மன்னிப்புக் கடிதத்தை இந்திய மாணவர்கள் 39 பேர்கள் மற்றும் மற்ற நாட்டு மாணவர்களுக்குக் கொடுத்தார். நாங்க வியந்துபோனோம். அவரோடு போட்டோ எடுக்கவும் அனுமதி இல்லை. அப்புறம் மூணு பல்கலைக்கழகங்களைச் சுற்றிக் காண்பிச்சாங்க. எங்க பள்ளி வழிகாட்டு ஆசிரியர் தனபால் சார் இல்லைனா, நான் இன்னைக்கு ஜப்பான் போயிட்டு வந்திருக்க முடியாது. எனக்கு நடந்தது எல்லாமே இன்னும் கனவு மாதிரிதான் இருக்கு. இன்னும் பல கண்டுபிடிப்புகளைச் செய்யணும்கிற உத்வேகம் ஏற்பட்டிருக்கு” என்றார் உற்சாகமாக.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: