தமிழனின் பொறியியல் ஆற்றலை பறைசாற்றும் கல்லணை – 2 ,000 ஆண்டுகளை கடந்தும் கம்பீரம் குறையாத கட்டுமானம்!

தமிழனின் பொறியியல் ஆற்றலை பறைசாற்றும் கல்லணை - 2 ,000 ஆண்டுகளை கடந்தும் கம்பீரம் குறையாத கட்டுமானம்!

தமிழனின் பொறியியல் ஆற்றலை பறைசாற்றும் கல்லணை – 2 ,000 ஆண்டுகளை கடந்தும் கம்பீரம் குறையாத கட்டுமானம்!

உலகில், முதன் முதலாக கட்டப்பட்ட அணைகளில், தற்போதும் நீர்ப்பாசன திட்டங்களில், உயிரோட்டத்துடன் இருக்கிறது என்றால், அது கல்லணை மட்டும் தான்.

கரிகாலச் சோழனால், 2-ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது கல்லணை. தஞ்சை மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில், இன்றும் கம்பீரமாக, காவிரி வெள்ளத்தை தாங்கும் சக்தி கொண்டதாகவும், தஞ்சை, நாகை, திருவாரூர் போன்ற டெல்டா மாவட்டங்களின் உயிர்நாடியாகவும் விளகுகிறது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


2,000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழனின் கட்டுமான திறமையை உலகுக்கு பறைசாற்றும் அடையாள சின்னமாகவும் விளங்குகிறது. காவிரியாற்றில் அடிக்கடி வந்த வெள்ளத்தால் மக்கள் அவதிப்படுவதைப் பார்த்த கரிகாலன், ஆற்றின் குறுக்கே, அணை கட்ட முடிவு செய்தான். இதன்படி, கட்டப் பட்டதே கல்லணை. கல்லும், களிமண்ணும் மட்டும் கொண்டு கட்டப்பட்ட கல்லணை 1,080 அடி நீளமும், 66 அடி அகலமும், 18 அடி உயரமும் கொண்டது.

பொறியியல் குறித்து எதுவும் தெரியாத, எந்த தொழில்நுட்ப வசதியும் இல்லாத காலத்தில், கட்டப்பட்ட கல்லணையை, உலகின் தலைசிறந்த பொறியியல் வல்லுனர்கள் பார்த்து, தமிழர்களின் திறமையை கண்டு வியந்தனர். ‘பாதர் ஆப் சிவில் இன்ஜினியரிங்’ என்றழைக்கப்பட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த ஆர்த்தர் காட்டன் கூட, கல்லணை கட்டிய விதத்தைப் பார்த்து, பெரும் ஆச்சரியம் அடைந்துள்ளார். ஓடும் தண்ணீரை தடுத்து நிறுத்தி, அதை பாசனத்துக்கு பயன்படுத்த முடியும், சேமிக்க முடியும் என்ற கல்லணையின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஆர்த்தர் காட்டன், பல நாடுகளில், அணைகளை கட்டியுள்ளார்.

வினோத வடிவத்தில் கட்டப்பட்ட கல்லணை, கிளை ஆறான கொள்ளிடத்தின் நீரோட்டத்தில் வண்டல் மண் அடித்து செல்லும் வகையில், வடிவமைக்கப்பட்டு உள்ளது. பெரும் பொறியியல் வல்லுனர்கள் கூட, இந்த தொழில்நுட்பத்தை வியந்து, தங்களின் பாராட்டுக்களை, பல இடங்களில் பதிவு செய்துள்ளனர்.

கல்லணை கட்டப்பட்ட பின், 1,800-ம் ஆண்டுகளில் டெல்டா மாவட்டங்களில், ஆறு லட்சம் ஏக்கர் நிலங்கள், காவிரி மற்றும் கல்லணையில் இருந்து பிரியும் ஆறுகளால் பாசன வசதி பெற்றுள்ளன. இதுவே தற்போது, 14 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.

மேட்டூர், தமிழகத்துக்கு தண்ணீர் தரும் தலைப் பகுதியாக விளங்குவது போல், கல்லணை, டெல்டா மாவட்டங்களின், பாசனத்துக்கான தலை பகுதியாக விளங்குகிறது.கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் என, நான்கு ஆறுகளாக பிரிந்து சென்று, டெல்டாமாவட்டங்களை வளப்படுத்து கின்றன.

கல்லணையில், ஒரு டி.எம்.சி., தண்ணீரை தேக்கி வைக்க முடியும். கல்லணையில் இருந்து பிரியும் காவிரிக்கு, 42மதகுகளும், வெண்ணாறுக்கு, 30 மதகுகளும், கல்லணை கால்வாயில், ஆறு, கொள்ளிடத்துக்கு, 33, என மொத்தம், 111 மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மதகுகள், தேவைக்கு ஏற்ப திறக்கப்பட்டு, பாசனத்துக்கு தண்ணீர் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. நவீன தொழில்நுட்பம் நிறைந்த இன்றைய காலத்தில் கட்டப்பட்டு வரும் பல நீர்த்தேக்க கட்டமைப்புகளும், கட்டடங்களும், சில ஆண்டுகளிலேயே சேதமடைந்து விடுவதை பார்த்து வருகிறோம்.

அப்படிப்பட்ட சூழலில், 2,000 ஆண்டுகளுக்கு முன், இப்படி ஒரு பிரமாண்ட, உறுதியான, எந்த காலத்திலும் நிலைத்து நிற்கக் கூடிய தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்ட கல்லணை, இன்றும் கம்பீரம் மாறாமல் நிற்கிறது என்றால், இது, கண்டிப்பாக தமிழனின் மதிநுட்பம் மற்றும் ஆற்றலுக்கான சான்று.

சீறிப் பாய்ந்து வரும் நதியை தடுக்க கல்லணையை கட்டிய அதே பகுதியில், அங்கு திறக்கப்படும் தண்ணீர், கடலில் சென்று கலக்காத வகையில் தேக்கி வைக்க, எந்த ஒரு முயற்சியும் இக்கால அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ மேற்கொள்ள வில்லை என்பது தான் வேதனை.

மேட்டூர் அணை நீர் திறப்பு, வினாடிக்கு, 52 ஆயிரத்து, 441 கன அடியாக குறைக்கப் பட்டது. மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளின்உபரிநீர் வரத்தால், 23ம் தேதி மேட்டூர் அணை நிரம்பியது. அந்த நீர், காவிரி யாற்றில் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம், வினாடிக்கு, 80 ஆயிரத்து, 291 கன அடியாக இருந்த, மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்றிரவு, 8:00 மணிக்கு, வினாடிக்கு, 54 ஆயிரத்து, 370 கன அடியாக சரிந்தது.

அதற்கேற்ப, வினாடிக்கு, 76 ஆயிரத்து, 611 கன அடியாக இருந்த நீர் திறப்பு, நேற்று, 52 ஆயிரத்து, 441 கன அடியாக குறைக்கப்பட்டது. ஒகேனக்கல் காவிரியில், நேற்று பிற்பகல், 3:00 மணிக்கு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று, 18வது நாளாக, ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை, 120 அடி உயரம் கொண்டது. 32.8 டி.எம்.சி., நீர் தேக்க முடியும். நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த, தென்மேற்கு பருவமழையால், நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. நேற்று மாலை, 5 மணி நிலவரப்படி, 96.37 அடியாகவும், நீர் இருப்பு, 26 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து, நீர்வரத்து அதிகரித் தால், சில நாட்களில், அணை நிரம்ப வாய்ப்புள்ளது.

தஞ்சையை அடுத்த, கல்விராயன்பேட்டை, கல்லணை கால்வாயில் கரை உடைந்ததால், 2,000 ஏக்கர் தரிசு வயலில் தண்ணீர் புகுந்தது. கல்லணையிலிருந்து பிரியும் கல்லணை கால்வாய், 60 கி.மீ.க்கு சென்று, 2 லட்சம் ஏக்கர் பாசன நிலங்களுக்கும், குடிநீர் ஆதாரமாக பயன்படுகிறது. 22ம் தேதி, கல்லணையில் இருந்து பாசனத்திற்காக கல்லணை கால்வாய், வெண்ணாறு, வெட்டாறு, காவிரி ஆறுகளில் தண்ணீர் திறக்கப்பட்டது.

கல்லணை கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர், 24ம் தேதி மாலை, கல்விராயன்பேட்டை வழியாக தஞ்சைக்கு வந்தது. நேற்று, இந்த கால்வாயில், 3,004 கன அடி வரை, தண்ணீர் திறக்கப்பட்டது.நேற்று காலை, 7:00 மணிக்கு, தஞ்சையை அடுத்த கல்விராயன்பேட்டை, கல்லணை கால்வாயின் தென்கரை, 20 அடி அகலத்தில் உடைப்பு ஏற்பட்டது. இதன் வழியாக வெளியேறிய தண்ணீர், அப்பகுதியில் உள்ள, 2,000 ஏக்கர் தரிசு நிலங்களில் கடல் போல் தேங்கியது.

பொதுப்பணித்துறை அலுவலர்கள், தீயணைப்பு துறை வீரர்கள், பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்ற காவல் துறையினர் இணைந்து, கால்வாய் உடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: