சென்னை :
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் ஏறுதலுவுதல் நடத்த அனுமதி வழங்க வலியுறுத்தி தமிழகத்தின் பல பகுதிகளிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.
60 கிராமங்களில் கடையடைப்பு :
ஏறுதலுவுதல் நடத்துவதற்கு இருக்கும் தடையை நீக்கி, ஏறுதலுவுதல் நடத்த அனுமதி அளிக்கும்படி வலியுறுத்தி மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த வெள்ளலூர் பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. வெள்ளலூரை சுற்றி உள்ள 60 கிராமங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஏறுதலுவுதலுக்கு ஆதரவாக வணிகர்களும், பொது மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்கள் சாலை மறியல் :
ஏறுதலுவுதலுக்கு ஆதரவாக நடந்து வரும் போராட்டங்களில் கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்று வருகின்றனர். புதுக்கோட்டை, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், தனிச்சியம் ஆகிய பகுதிகளில் ஏறுதலுவுதலுக்கு அனுமதி அளிக்கும்படி வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் பலர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், திருச்சி, திருப்பூர், மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதிகளில் ஏறுதலுவுதலை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.