சர்வதேச அளவில் நடந்த தடகள போட்டியில், சிவந்தி பள்ளி மாணவ – மாணவியர், ஐந்து தங்கம், ஒரு வெள்ளி பதக்கங்களை வென்று, சாதனை படைத்துள்ளனர்.
சர்வதேச அளவிலான, தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், நேபாளில் சமீபத்தில் நடந்தன.
இதில், இந்தியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஜெர்மன் உள்ளிட்ட எட்டு நாடுகளிலிருந்து, ஜூனியர் அளவிலான போட்டியில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ – மாணவியர் பங்கேற்றனர்.
இதில், நடை ஓட்டப் பந்தயம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தியா சார்பில், தமிழகத்தில் இருந்து, 1,000 பேர் பங்கேற்றனர். அதில், சென்னை, ராமாபுரம், சிவந்தி மெட்ரிக்குலேஷன்மேல்நிலை பள்ளியிலிருந்து, ஆறு மாணவ -மாணவியர் பங்கேற்றனர்.
இவர்களில், 400 மீ., ஓட்டப் பந்தயத்தில் ஆகாஷ்; 200 மீட்டரில், முகமது சல்மான்; 100 மீட்டரில், வெங்கடேஷ் வெற்றி பெற்று, தங்கம் பதக்கம் வென்றனர். குண்டு எறிதலில், ஷப்ரானா ஆப்ரின், ஈட்டி எறிதலில், அஜிதா, தங்கம் வென்றனர். வட்டு எறிதலில், சேரலாதன் வெள்ளி பதக்கம் வென்றார்.
தினமலர்