தமிழக மீனவர்களை நிர்வாணப்படுத்தி இந்திய கடற்படையினர் கொடூர தாக்குதல்!

தமிழக மீனவர்களை நிர்வாணப்படுத்தி இந்திய கடற்படையினர் கொடூர தாக்குதல்!

தமிழக மீனவர்களை நிர்வாணப்படுத்தி இந்திய கடற்படையினர் கொடூர தாக்குதல்!

தமிழக மீனவர்களை நடுக்கடலில் இந்திய கடலோர காவல்படையினர் நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் விடுவிக்கப்பட்ட படகுகளை மீட்கச் சென்ற தமிழக மீனவா்கள் மீது இந்திய கடற்படையினா் தாக்குதல் நடத்தியிருப்பது மீனவா்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


இலங்கை அரசு பறிமுதல் செய்த தமிழக மீனவா்களின் படகுகளை சமீபத்தில் விடுவித்து உத்தரவிட்டது. அந்த படகுகளை மீட்க இரண்டாம் கட்டமாக தமிழக குழு இலங்கை சென்றது.

இலங்கை வசம் இருந்த படகுகளை மீட்க சென்றபோது, தமிழக மீனவர்களுக்கு போதிய எரிபொருள் வழங்கப்படவில்லை. இந்நிலையில் இலங்கையில் இருந்து படகுகளை மீட்டு இந்திய பகுதியை நோக்கி மீனவா்கள் வந்தபோது ஒரு படகு பழுதாகி நின்றுள்ளது. இதனால் கூடுதல் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. கால தாமதம் ஏற்பட்டதைத் தொடா்ந்து தமிழக மீனவா்களுக்கும், இந்திய கடற்படைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தில் ஈடுபட்ட மீனவா்களை இந்திய கடற்படையினா் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மீனவா் அதிர்ச்சியடைந்தனர். காயமடைந்த மீனவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, இந்திய கடற்படையினா் இலங்கை கடற்படையினரைப் போன்றே செயல்பட்டனா். அவா்கள் எங்களது ஆடைகளை களைந்து மிகவும் அவமானப்படுத்தியதாக புகார் தெரிவித்தார். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள எங்களது வலைகளையும் சேதப்படுத்தி விட்டனா் என்று மீனவா்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த மாணவா் செந்தில் குமாா் உள்ளிட்ட மீனவா்கள் நாகை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவ்வளவு காலம் இலங்கை கடற்படையினரால் அவதிக்குள்ளான நாங்கள் தற்போது இந்திய கடற்படையால் தாக்கப்படுவது மிகுந்த மன வேதனைக்கு ஆளாக்குவதாக மீனவா்கள் வருத்தம் தொிவித்துள்ளனா். தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்குவது, மீனவர்களின் வலைகளை அறுப்பது, அவர்களை கைது செய்து படகுகளை பறிமுதல் செய்வது என தொடர்ந்து பல அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் தமிழக மீனவர்களின் சில படகுகளை இலங்கை அரசு விடுப்பதாக அறிவித்தது. இதனால் தங்கள் படகுகளை மீட்க சென்ற நாகை மாவட்ட மீனவர்களிடம் இந்திய கடற்படையினர் அத்துமீறி நடந்திருப்பதும், அவர்களை தாக்கி இருப்பதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்களை பாதுகாப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: