”தமிழைக் கற்றுக்கொண்டால், எந்த மொழியை வேண்டுமானாலும் எளிதில் கற்றுக்கொள்ளலாம்” என ‘மிஸ் இந்தியா’ பட்டம் பெற்ற அனுக்ரீத்தி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ‘மிஸ் இந்தியா’ பட்டம் பெற்ற அனுக்ரீத்தி கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், `தமிழகத்தைச் சேர்ந்த நான், மிஸ் இந்தியாவாகத் தேர்வானது மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்தகட்டமாக உலக அழகிப் போட்டிக்குத் தயாராகி வருகிறேன். அதை நோக்கி கவனம் செலுத்தி வருகிறேன். உலக அழகி பட்டம் பெறுவதே எனது கனவு; உலக அழகி பட்டம் பெற்ற பின், என் படிப்பை மீண்டும் தொடர்வேன்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டால், எந்த மொழியை வேண்டுமானாலும் எளிதில் கற்றுக்கொள்ள முடியும். தமிழ் இலக்கியம் போல வேறு எந்த மொழியிலும் இல்லை. உலக அழகி பட்டம் பெற்றவர்கள், மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும். வெளிநாடுகளில் இந்தியாவின் பிரதிநிதியாகக் கலந்துகொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று தெரிவித்தார்.