கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற உத்தரவு!

கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற உத்தரவு!

கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற உத்தரவு!

‘மதுரை அருகே, கீழடி அகழாய்வு பொருட்களுக்காக அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்’ என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னை வழக்குறைஞர் கனிமொழி மதி தாக்கல் செய்த பொதுநல மனு:

சிவகங்கை மாவட்டம், கீழடியில், 110 ஏக்கரில் ஆற்றங்கரை நாகரிகம் பற்றிய தொல்லியல் அகழாய்வு நடக்கிறது. இந்நாகரிகம், 2000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. கீழடியில், சேகரித்த பழங்கால பொருட்களை பெங்களூரு அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்ல மத்திய தொல்லியல்துறை முடிவு செய்துள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும். கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கனிமொழி மதி மனு செய்திருந்தார். நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் அமர்வு விசாரித்தது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


கீழடி அகழாய்வில், கண்டெடுக்கப்பட்ட பொருட்களை மக்கள் பார்வையிடும் வகையில், அருங்காட்சியகம் அமைக்கலாமே… இவ்விவகாரத்தில் என்னதான் நடக்கிறது? என நீதிபதிகள் கேள்விக் கனைகளை தொடுத்தனர்.

மத்திய தொல்லியல்துறை வழக்கறிஞர் கூறியதாவது, “கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பாதியளவு பொருட்கள் இங்கும், பாதியளவு பொருட்கள் ஆய்விற்காக பெங்களூரிலும் உள்ளன. எழுத்துபூர்வமாக அறிக்கை தயாரிக்கும் பணி நடக்கிறது. மியூசியம் அமைக்க மாநில அரசு இடம் வழங்க வேண்டும் “, என்றனர்.

மாநில அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் சொன்னதாவது : கீழடி அருகே கொந்தகையில் அருங்காட்சியகம் அமைக்க, 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு அருங்காட்சியகம் அமைக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசே. நிதி உதவி தேவைப்பட்டால், மாநில அரசு வழங்கத் தயாராக உள்ளதாக கூறினார்.

அதற்கு நீதிபதிகள், “சாரநாத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்துாண், அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. கீழடியில் அருங்காட்சியகம் அமைத்தால் தானே நம் முன்னோரின் வரலாறு, கலாசாரத்தை தற்போதைய தலைமுறை பார்க்க இயலும். எனவே, கீழடி அகழாய்வு பொருட்களை மக்கள் பார்வைக்கு வையுங்கள். இதில் யாரோ தடை ஏற்படுத்துவது போல் தெரிகிறதே? ” என்றனர்.

மத்திய தொல்லியல்துறை வழக்கறிஞர், தனது வாதத்ததின் போது, “பழங்கால பொருட்கள் பற்றி எழுத்துபூர்வ அறிக்கை தயாரிக்கும் பணி முடிந்ததும், சாத்தியக் கூறுகள் இருக்கும் பட்சத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். இவ்விவகாரத்தை ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன “, என்றார்.

இதற்கு நீதிபதிகள்,, “ஊடகங்கள், ஜனநாயகத்தின் நான்காவது துாண். அவர்களுக்குரிய கடமையைச் செய்கின்றனர். பல மூடிமறைக்கப்பட்ட செய்திகளை, ஊடகங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன “, இவ்வாறு சூடான விவாதம் நடந்தது.

பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

கீழடி பழங்கால பொருட்கள், நினைவுச் சின்னங்களுக்காக அருங்காட்சியகம் அமைக்க இடம் வழங்குவதாக மாநில அரசு கூறுகிறது. மாநில அரசு இடம், நிதி வழங்கும் பட்சத்தில், எழுத்துபூர்வ அறிக்கை தயாரிப்பு முடிந்தபின், அதனடிப்படையில் அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்படும் என, மத்திய அரசு கூறுகிறது.

மாநில அரசின் உதவியுடன், எவ்வளவு விரைவில் அருங்காட்சியகம் அமைக்க முடியுமோ, அவ்வளவு விரைவில் அமைக்க, மத்திய தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணை, ஆகஸ்டு, 24-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என உத்தரவில் கூறினர்.

மத்திய தொல்லியல்துறை இயக்குனர் ஜெனரல், மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை செயலர் ஆகியோருக்கு அறிக்கை அனுப்பி, விசாரணையை, ஜூலை 5-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: