தமிழுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் குரூப் 1 தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றம்!

தமிழுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் குரூப் 1 தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றம்!

குரூப் 1 முதல் நிலை தேர்வுக்கான பாடத் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. தமிழுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் திருக்குறள், சங்க இலக்கியம் ஆகிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி முதல் நிலை தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தில் வரலாறு, இந்திய கலாச்சாரம் உட்பட சில பிரிவுகளில் பாடப் பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளன.

தமிழுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் திருக்குறள், சங்க இலக்கியம், தமிழக வரலாறு, பண்பாடு, வளர்ச்சி நிர்வாகம் சார்ந்த பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த புதிய பாடத் திட்டத்தின்படியே இனி குரூப் 1 முதல் நிலை எழுத்துத் தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

இதையடுத்து மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் குரூப் 1 முதல் நிலைத்தேர்வில் 175 பொதுஅறிவு வினாக்களும், 25 கணிதம் தொடர்பான வினாக்களும் இடம்பெறும். புதிய மாற்றங்களின்படி குரூப் 1 மற்றும் குரூப் 2 முதல்நிலை தேர்வுகளுக்கு ஒரே பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனால் குரூப் 2 தேர்வுக்கு தயாராகும் நபர்கள், குரூப் 1 தேர்வையும் இனி எளிதாக அணுகலாம். அதேநேரம் குரூப் 1 முதன்மை தேர்வுக்கான பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பழைய பாடத்திட்டமே தொடரும் என டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: