கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டில்லி பயணம்

governor, RN Ravi, Delhi Visit, கவர்னர், டில்லி பயணம்
facebook sharing button
twitter sharing button
தமிழக கவர்னராக பொறுப்பேற்ற ஆர்.என்.ரவி, முதல் முறையாக இன்று டில்லி செல்கிறார்.

தமிழக கவர்னராக, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரியும், நாகாலாந்து முன்னாள் கவர்னருமான ஆர்.என்.ரவி, கடந்த 18ம் தேதி பதவியேற்றார். அவரை, தமிழக டி.ஜி.பி., சைலேந்திரபாபு நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்னை, பயங்கரவாதிகள், போதைப் பொருள் நடமாட்டம் உட்பட பல விபரங்களை கவர்னர் கேட்டறிந்தார். கவர்னராக பதவியேற்ற பின் முதன்முறையாக, கவர்னர் ரவி இன்று காலை 7:00 மணிக்கு, விமானத்தில் டில்லி செல்கிறார்.

‘அங்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்க உள்ளார். ‘சென்னை திரும்பியதும் உயர்மட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகளைச் சந்திக்க உள்ளார்’ என, கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை, உளவுத் துறை கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் சந்தித்து பேசினார்.தமிழகத்தின் புதிய கவர்னராக, ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி ஆர்.என்.ரவி பதவி ஏற்றுள்ளார். இவரை, நேற்று முன்தினம் டி.ஜி.பி., சைலேந்திரபாபு சந்தித்தார்.

இந்நிலையில், கவர்னரை நேற்று, உளவுத் துறை கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது கடலோர பாதுகாப்பு, பயங்கரவாத செயல்கள் கண்காணிப்பு என, பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
 
நன்றி : தினமலர்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: