அரசுப் பள்ளி மாணவனை ஜப்பான் வரை அழைத்துச் சென்ற அறிவியல் கண்டுபிடிப்பு!

அரசுப் பள்ளி மாணவனை ஜப்பான் வரை அழைத்துச் சென்ற அறிவியல் கண்டுபிடிப்பு!

அரசுப் பள்ளி மாணவனை ஜப்பான் வரை அழைத்துச் சென்ற அறிவியல் கண்டுபிடிப்பு!

ஜப்பான் நாட்டிற்குத் தனது அறிவியல் கண்டுபிடிப்பின் காரணமாகச் செல்லும் வாய்ப்பைப் பெற்றிருக்கும் கரூர் மாவட்ட பள்ளி மாணவனை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் நேரில் அழைத்துப் பாராட்டுதலும், ஆலோசனையும் வழங்கினார்.

நடப்பு கல்வியாண்டில் தமிழகம் சார்பாக ஜப்பான் செல்லும் இளம் விஞ்ஞானியான தான்தோன்றிமலை ஒன்றியத்தில் உள்ள வெள்ளியணை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவன் ம.ஹரிஹரனை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் அழைத்துப் பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர், “அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் அறிவியல் கண்டுபிடிப்பு திறன்களை ஊக்குவிக்கும் பொருட்டு அறிவியல் ஆர்வமுள்ள மாணாக்கர்களைத் தேர்வு செய்து ஜப்பான் நாட்டின் அறிவியல் முன்னேற்றங்களைக் காண செய்வதுடன், அந்நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் செய்யவும், தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் நடைமுறைப்படுத்தி வருகிறது. நடப்பு கல்வியாண்டில் 6 மாணாக்கர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தமிழகம் சார்பாக மே 12 முதல் 19 வரை ஜப்பான் நாட்டிற்குச் சென்று அறிவியல் முன்னேற்றங்களைக் காண உள்ளனர். இதுபோன்று மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு மாணவர்களும் தங்களுடைய உள்ளார்ந்த திறமைகளை மேம்படுத்துவதற்குக் கண்டுபிடிப்புகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும், இது ஒரு உந்து சக்தியாக உள்ளது. இதற்குத் துணைபுரியும் சக மாணவர்களையும், ஆசிரியர்களையும் வெகுவாக பாராட்டுகிறேன். ஹரிஹரன் நமது மாவட்டத்திற்கு மட்டுமல்ல, அரசுப்பள்ளிகளுக்கே பெருமையை தேடித் தந்துள்ளார். ஒரு சாதாரண குக்கிராமத்தைச் சேர்ந்த இவர் தனது அறிவியல் ஆய்வு திறமையால், ஜப்பான் நாட்டிற்குச் செல்லும் அரிய வாய்ப்பைப் பெற்றுள்ளார். இதுபோன்று மற்ற மாணவர்களும் இதுபோல் அறிவியலில் சாதனை புரிய வாழ்த்துகள்” என்றார்.

ஜப்பான் செல்லும் வாய்ப்பைப் பெற்ற மாணவன் ஹரிஹரனிடம் பேசினோம். “நான் சாதாரண கிராமத்தைச் சேர்ந்தவன். என்னை இந்த அளவுக்கு ஜப்பான் வரை போக காரணமாக இருந்தவர் எங்கள் பள்ளியின் அறிவியல் வழிகாட்டு ஆசிரியர் தனபால் சார்தான். நான் கண்டறிந்த சூழலியல் காக்கும் கழிவறைதான் என்னை ஜப்பான் வரை போக வச்சுருக்கு. கல்வாழை மூலம் சூழலிக்கு எந்த கெடுதலும் வராத, அதேநேரம் நீரும் அதிகம் செலவாகாத இந்த கழிப்பறையால், சுகாதாரம் பெருகும். இந்த கழிவறை அமைக்க பணமும் அதிகம் செலவாகாது” என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: