`இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் மேல்’ – ஆளுநர் பன்வாரிலால் பேச்சு!

`இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் மேல்' - ஆளுநர் பன்வாரிலால் பேச்சு!

`இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் மேல்’ – ஆளுநர் பன்வாரிலால் பேச்சு!

கும்பகோணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திப்பிராஜபுரத்தில் நடைபெற்ற விழாவில் பல்வேறு துறைகளில் முனைவர் பட்டம் பெற்று ஆராய்ச்சி மேற்கொண்ட நான்கு பேருக்கு தலா 25,000 மதிப்பிலான ரொக்கப் பரிசு மற்றும் சான்றும் கொடுத்தார். அதைத் தொடர்ந்து சுதந்திரப் போராட்ட தியாகி செண்பகராமன் பிள்ளையின் வெங்கலச் சிலையை திறந்து வைத்தார். அதன் பிறகு அவர் பேசியதாவது, “நான் இந்தியாவில் மகாராஷ்டிரா, அஸ்ஸாம், மேகாலயா ஆகிய இடங்களில் வேலை பார்த்துள்ளேன். தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் ஆளுநராக உள்ளேன்.

இதில் தமிழகத்தில் இதுவரை 25 மாவட்டங்களுக்குச் சென்று வந்துள்ளேன். என்னுடைய பயண அனுபவத்தில் நான் பார்க்கும்போது, மற்ற மாநிலங்களை விட தமிழகம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளது கண்கூடாகத் தெரிகிறது. தூய்மை இந்தியா திட்டம் இந்தியாவில் சிறப்பாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பை வழங்கி, சுகாதாரத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். ஒவ்வொருவரும் தூய்மைக்காக வாரத்துக்கு இரண்டு மணி நேரம் வீதமும், வருடத்துக்கு 100 மணி நேரமும் ஒதுக்கி நாட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள உறுதி ஏற்க வேண்டும்” என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>