இந்திய சாதனை புத்தகத்தில் முத்திரை பதித்த ராமநாதபுரம் மாவட்ட 3 வயது பெண் குழந்தை!

இந்திய சாதனை புத்தகத்தில் முத்திரை பதித்த ராமநாதபுரம் மாவட்ட 3 வயது பெண் குழந்தை!

இந்திய சாதனை புத்தகத்தில் முத்திரை பதித்த ராமநாதபுரம் மாவட்ட 3 வயது பெண் குழந்தை!

ஒரு நிமிடத்தில் 69 தலைவர்களின் பெயர்களை கூறிய 3 வயது பெண் குழந்தை இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.

ராமநாதபுரம் மாவட்டம், சிகில்ராஜ வீதியை சேர்ந்த இன்ஜினியர் தினேஷ்குமார் மகள் தமிழினி (3). இவர், ஒரு நிமிடத்தில் 69 சர்வதேச மற்றும் தேசிய தலைவர்கள், மாநில முதல்வர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், விஞ்ஞானிகள், விண்வெளி வீரர்களின் பெயர்களை படத்தை பார்த்து சொல்லி சாதனை படைத்தார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


நாமக்கல்லை சேர்ந்த 5 வயது சிறுவன் ரேவந்த், ஒரு நிமிடத்தில் 66 தலைவர்களின் பெயரை கூறி படைத்த சாதனையை தமிழினி முறியடித்தார். இந்திய சாதனை புத்தக நிறுவன பொறுப்பாளர் விவேக், தமிழினியை பாராட்டி சான்றிதழ், பதக்கம் வழங்கினார்.

இதுகுறித்து அவரின் தாய் ராஜராஜேஸ்வரி கூறியதாவது: தமிழினிக்கு ஒன்றே முக்கால் வயதில் 4 அல்லது 5 தலைவர்களின் படத்தை காட்டி, பெயர்களை நினைவில் வைத்துக் கொள்ளும் பயிற்சி அளித்தேன். படிப்படியாக தலைவர்கள் படங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, பெயர்களை தெரிந்து கொள்ள கற்றுக் கொடுத்தேன். இந்திய சாதனை புத்தகத்தில் தமிழினி இடம் பிடித்தது மகிழ்ச்சி, என்று அவரின் தாய் ராஜராஜேஸ்வரி கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: