செஞ்சி கோட்டையை உலக தரம் வாய்ந்த, பாரம்பரிய நினைவுச் சின்னமாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கை!

செஞ்சி கோட்டையை உலக தரம் வாய்ந்த, பாரம்பரிய நினைவுச் சின்னமாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கை!

செஞ்சி கோட்டையை உலக தரம் வாய்ந்த, பாரம்பரிய நினைவுச் சின்னமாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கை!

வரலாற்று சிறப்புமிக்க செஞ்சி கோட்டையை, உலக தரம் வாய்ந்த, பாரம்பரிய நினைவுச் சின்னமாக, தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை, இந்திய தொல்லியல் துறையினர் துவக்கி உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள செஞ்சி கோட்டை, 13-ம் நுாற்றாண்டில், 12 கி.மீ., மதில் சுவர்களால், மூன்று மலைகளை இணைத்து, பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. செஞ்சி கோட்டையை பார்ப்பதற்கு, தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வருகின்றனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


நாடு முழுவதும் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள, பாரம்பரிய நினைவுச் சின்னங்களில் சிலவற்றை தேர்வு செய்து, உலக அளவிலான தரத்திற்கு உயர்த்தி, இந்தியாவின் பாரம்பரிய பெருமையை உலகிற்கு உணர்த்தவும், வெளிநாட்டு சுற்றுலா பயணியரை கவரவும், இந்திய தொல்லியல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.இதன்படி, தமிழகத்தில், மாமல்லபுரம் மற்றும் செஞ்சி கோட்டை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

செஞ்சி கோட்டையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த திட்டம் தயாரிக்க, இரண்டு நாள் ஆய்வு முடிக்கப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில், உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

செஞ்சி கோட்டை வளாகத்தில், கோட்டையின் வரைபடம், அனைத்து இடங்களிலும் தகவல் பலகைகள் வைக்கப்பட உள்ளன. கண் பார்வையற்றவர்கள், பிரெய்லி முறையில் செஞ்சி கோட்டையை பற்றி தெரிந்து கொள்ள, ஒவ்வொரு பகுதியிலும், அந்தந்த பகுதி குறித்த தகவல்களை, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், ‘ஆடியோ’ வாக கேட்கும் வசதியும் ஏற்பாடு செய்துதரப்பட உள்ளது.

சுற்றுலா பயணியருக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தித்தரவும், ‘பேட்டரி’ கார், நவீன கழிப்பறை வசதிகள் உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. நீண்டகால திட்டமாக, செஞ்சி கோட்டையில் மின் விளக்குகள் அமைத்து, இரவு நேரத்திலும், செஞ்சி கோட்டை அழகுடன் மிளிர்வதற்கான ஏற்பாடுகளை செய்யவும், கோட்டையின் சேதமடைந்த பகுதிகள், கோவில் கோபுரங்கள் முழுவதையும் செப்பனிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: