வழக்குரைஞராகப் பதிவு செய்த முதல் திருநங்கை சத்யஸ்ரீ ஷர்மிளா!

வழக்குரைஞராகப் பதிவு செய்த முதல் திருநங்கை சத்யஸ்ரீ ஷர்மிளா!

வழக்குரைஞராகப் பதிவு செய்த முதல் திருநங்கை சத்யஸ்ரீ ஷர்மிளா!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ள திருநங்கை சத்யஸ்ரீ ஷர்மிளா, இந்தியாவில் வழக்குரைஞராகப் பதிவு செய்யும் முதல் திருநங்கை.

ராமநாதபுரத்தை பூர்வீகமாக கொண்ட அவர் சேலத்தில் சட்டம் பயின்றுள்ளார். தமது வழக்குரைஞர் பணியைப் பயன்படுத்தி தனது சமூகத்திற்கு சட்டரீதியான உதவி செய்து அவர்களை முன்னேற்றப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

”வழக்குரைஞராக வேண்டும் என்பது என நீண்டநாள் கனவு . நான் நீதிபதியாக வேண்டும் என மூத்த நீதிபதிகள் வாழ்த்தியுள்ளனர். எனது திருநங்கை சமூகத்திற்காக சேவை செய்வேன். அனைத்து துறைகளிலும் திருநங்கைகள் முன்னேறும் காலம் இது. இந்திய அளவில் முதல் திருநங்கை வழக்கறிஞராக பதிவு செய்துள்ளேன் என்பதில் மகிழ்ச்சி,” என்று அவர் தெரிவித்தார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

மேலும் ”என் திருநங்கை அம்மா ஷர்மிளா, எனது சகோதரி தேவி, சுதா, ஜெயா என பலரும் உதவியுள்ளனர். திருநங்கை நலனில் அக்கறை உள்ள அமைப்புகள் பலரும் எனக்கு உதவியுள்ளன,” என்று தெரிவித்தார்.

முதல் முறையாக திருநங்கை ஒருவர் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார் என்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. திருநங்கை சமூகத்தினர் சந்திக்கும் கொடுமைகள் ஏராளம். தற்போது திருநங்கை ஒருவர் வழக்கறிஞராக உள்ளார் என்பது திருநங்கைகள் பலருக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும். வழக்குகள் பதிய முன்வருவார்கள். அதேபோல பல திருநங்கைகள் சட்டம் படிக்க முன்வருவார்கள். சத்தியஸ்ரீ ஒரு தொடக்கப்புள்ளி.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: